ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

பத்தாங்காலி ஆற்றின் தூய்மைக்கேடு

பெரித்தா ஹாரியான் ஜூன் 6 2017-இல் வெளியான செய்தி குறித்து உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம் பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளது.

சிலாங்கூர் குடிநீர் நிர்வாக வாரியம்  (லுவாஸ்), சிலாங்கூர் வடிகால் மற்றும் நீர்ப்பாசன இலாகா (ஜெபிஎஸ்) போன்ற அரசு இலாகாவின் அதிகாரத்திற்கு உட்பட்டாலும் ஊராட்சி மன்றங்களுக்கும் செக்சன் 69 & 70 ஊராட்சி சட்டத்தின் கீழ் ஆற்றின் ஓடும் நீரை தடை செய்யும் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

இதன் அடிப்படையில், பத்தாங்காலி ஆற்றின் தூய்மைக்கேடு விவகாரத்தில் உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம் (எம்டிஎச்எஸ்) தனது அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளில் உணவகங்கள் நடத்தி வரும் உரிமையாளர்களுக்கு “கிரிஸ் டிரேப்” அல்லது எண்ணெய் வடிதட்டு பொருத்தி இருக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையானது உணவு கழிவுகள் நேரிடையாக கால்வாய் மற்றும் வடிகால் நீரோட்டத்தில் கலந்து தூய்மைக்கேடு ஏற்படுவதை தவிர்க்க எடுக்கப்படும் முயற்சி ஆகும். உணவக உரிமையாளர்கள் இந்த நடைமுறையை பின்பற்ற தவறினால் அமலாக்க பிரிவினரால் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளையில், உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம் குளங்களில் மீன் வளர்க்கும் உரிமையாளர்கள் ஆற்றின் தூய்மைக்கேடு ஏற்பட காரணமாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிலாங்கூர் குடிநீர் நிர்வாக வாரியம்  (லுவாஸ்), சிலாங்கூர் வடிகால் மற்றும் நீர்ப்பாசன இலாகா (ஜெபிஎஸ்), சுற்று சூழல் இலாகா மற்றும் மாவட்ட மன்றமும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் இறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் தூய்மைக்கேடு ஏற்படுவதை தடுக்க மாவட்ட மன்றத்தை தொடர்பு கொள்ள வேண்டிய எண் 03-60641331 அல்லது 03-60641050. எங்கள்இணையதளம் www.mdhs.gov.my.

ஆற்றின் தூய்மை அனைவரின் கடமை


Pengarang :