NATIONAL

பாக்காத்தான் மற்ற ஊழல்களுக்கும் அரச விசாரணை ஆணையம் அமைக்க வலியுறுத்தல்

ஷா ஆலம், ஜூன் 24:

1980-கள் மற்றும் 1990-களில் நடந்ததாக சொல்லப்படும் அந்நிய செலாவணி மோசடிகளை விசாரணை நடத்த அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) அமைத்த மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கையை பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி இளைஞர் அணியினர் வரவேற்கிறார்கள்.

கெஅடிலான் இளைஞர் பிரிவு தேசிய தலைவர் நிக் நஸ்மி நிக் அமாட் கூறுகையில் அரச விசாரணை ஆணையம் ஏற்படுத்திய செயலுக்கு முழுமையான ஆதரவை தரும் வேளையில் தற்போது உலகையே உலுக்கி கொண்டிருக்கும் மலேசிய அரசியல் தலைவர்கள் சம்பந்தப்பட்ட   பல்வேறு ஊழல்களுக்கும் இதேபோல ஆணையம் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

”   மத்திய அரசாங்கம் வெளிப்படையாக செயல்பட்டு மற்ற ஊழல்களுக்கும் அரச விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என நான் எதிர்ப்பார்க்கிறேன். தற்போதைய அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம் மிகவும் பழமையான ஊழலாக கருதப்படும் அந்நிய செலாவணி மோசடியை விசாரிக்க ஆவலாக இருக்கிறார்கள். ஆனாலும் 1 மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி), தாபோங் ஹாஜி வாரியம் மற்றும் பெல்டா குலோபல் வென்ட்ச்ர் ஹோல்டிங்ஸ் போன்ற இமாலய ஊழல்களையும் மறந்து விடக்கூடாது,” என்று விவரித்தார்.

1MDB-1024x731

 

 

 

 

 

 

 

இதனிடையே, மலேசிய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறுகையில், அமைச்சரவை அமெரிக்க நீதித்துறை 1எம்டிபி சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டையும் விசாரிக்க அரச விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அமெரிக்க நீதித்துறை குற்றச்சாட்டு அடிப்படையில் அரச விசாரணை ஆணையம் ஏற்படுத்தும் நடவடிக்கை துரிதப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

”    நாட்டின் அட்டர்னி ஜெனரல், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் பேங்க் நெகாரா ஆகிய உயரிய பொறுப்புள்ள அமைப்புகள் உடனடியாக 1எம்டிபி சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடத்த வேண்டும்,” என்று கூறினார்.

#கேஜிஎஸ்


Pengarang :