RENCANA PILIHANSELANGOR

பெடுலி சேஹாட் திட்டம்: கிராமப்புற சட்ட மன்றங்களின் சிறந்த செயல்பாடுகள்

ஷா ஆலம், ஜூன் 27:

மேரு சட்ட மன்றத் தொகுதி இது வரை 6,901 பெடுலி சேஹாட் சுகாதார அட்டை திட்டத்தில் மக்களை பதிவு செய்து சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 56 சட்ட மன்றங்களில் முதல் இடத்தில் உள்ளது. கடந்த மே 30, 2017 வரை மேரு சட்ட மன்றம், டெங்கில் மற்றும் சுங்கை பஞ்சாங் சட்ட மன்றங்களை பின்னுக்குத் தள்ளியது. டெங்கில் இரண்டாவது இடத்தில் 6,653 பங்களிப்பாளர்களையும் சுங்கை பஞ்சாங் 6,647 பதிவுகளையும் கொண்டு மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பதிவுகளின் நிலவரப்படி, பெடுலி சேஹாட் சுகாதார அட்டை திட்டத்தில் இது வரையில் 178,513 பேர்கள் விண்ணப்பம் செய்திருப்பதாகவும், இதில் 155,677 விண்ணப்பதாரர்களுக்கு பெடுலி சேஹாட் அட்டை வழங்கப்பட்டு விட்டதாகவும் சிலாங்கூர் இன்றுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

170410 peduli sihat-01

 

 

 

 

 

விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து, மீதிருந்த 22,836 பேர்களின் விண்ணப்பங்களில் 4,449 தள்ளுபடி செய்தது என்றும் மேலும் 18,397 பேர்களின் விண்ணப்பங்கள் இன்னும் பரிசீலனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புள்ளி விவரங்கள் படி பெடுலி சேஹாட் சுகாதார அட்டை திட்டம் நகர மக்களை விட கிராமப்புற மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நகர்ப்புற சட்ட மன்றமான கம்போங் துங்கு 250 குடும்பங்களை பதிவு செய்து, சிலாங்கூரிலே மிகக் குறைந்த எண்ணிக்கையை பதிவு செய்து உள்ளது. கம்போங் துங்குவை அடுத்து கோத்தா அலாம் ஷா 394 பதிவையும், டமன்சாரா உத்தாமா சட்ட மன்றம் 401 சுகாதார அட்டை திட்டத்தில் பதிவு செய்து உள்ளது என்றும் கூறப்படுகிறது.

பெடுலி சேஹாட் சுகாதார அட்டை திட்டம் இரண்டு திட்டங்கள் கொண்டுள்ளது. அதில் ஒன்று குடும்ப அட்டை மற்றொன்று தனிநபர் அட்டை ஆகும். இது வரை 131,918 (85.02%) குடும்ப அட்டைகளும் 23,357 (14.97) தனிநபர் அட்டைகளும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன ரீதியாக பார்க்கும் பொழுது மலாய்காரர்கள் 97,940 பேர்கள் அல்லது 63.08 % பதிவு செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தில் இந்தியர்கள் 31,069 பேர்கள் அல்லது 20.01% பதிவு செய்து இருப்பதாகவும் சீனர்கள் முறையே 25,108 பேர்களும் (16.17%) மற்றும் மற்ற இனத்தவர்கள் 1,153 பேர்களும் பதிவு செய்து இருப்பதாக செல்கேட் குழுமம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருக்கிறது.

சட்ட மன்ற சேவை மையங்கள் வழி தொடர்ந்து மக்கள் பதிவு செய்யும் முறையில் முதலிடம் வகிக்கிறது. இதையடுத்து இணையதளத்தில் பதிவு செய்வதும் அல்லது சிறப்பு பதிவு செய்வதும் நடைமுறையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

28.02 Peduli Sihat Kajang (ASRI)

 

 

 

 

 

இதனிடையே 764 தனியார் மருந்தகங்கள் பெடுலி சேஹாட் திட்டத்தின் அதிகாரப்பூர்வ மருந்தகங்களாக நியமிக்கப்பட்ட வேளையில் மேலும் 161 மருந்தகங்கள் இன்னும் பரிசீலனையில் உள்ளன.

இதுவரையில் மூன்று நோய்கள் அதிகமாக பெடுலி சேஹாட் மருந்தகங்களில் சிகிச்சை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சுவாசக் குழாயில் கிருமிகள் ஏற்படும் மூச்சு திணறல், காய்ச்சல் மற்றும் இருமல் ஆகிய நோய்களே ஆகும். கடந்த ஜனவரி 24, 2017-இல் தொடங்கப்பட்டு இது வரை ரிம 843,102 இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்றும் இதில் 17,905 விண்ணப்பங்கள் மூலம் கிடைக்கப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. டெங்கில் சட்ட மன்றம் (ரிம62,813) அதிகமான இழப்பீடு தொகையையும் புக்கிட் மெலாவாத்தி (ரிம41,613) அடுத்த இடத்திலும், சுங்கை பஞ்சாங் ( ரிம 34,789) மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கம்போங் துங்கு, கோத்தா அலாம் ஷா மற்றும் டமன்சாரா உத்தாமா ஆகிய சட்ட மன்றங்கள் ஆகக் குறைந்த அளவிலான இழப்பீடு தொகையை பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

#கேஜிஎஸ்


Pengarang :