MEDIA STATEMENT

மறுப்பு அறிக்கை வெளியிடாமல், தவறான செய்தி வெளியிட்டதற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

தகவல் தொடர்பு மற்றும் பல்ஊடக அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாலே சைட் கெருவாக் சரவாக் ரெப்போட் இணையதள செய்திகளை இந்நாட்டு மக்கள் நம்பக்கூடாது என்ற அறிக்கை வெளியிட்டது அனைவரும் அறிந்ததே. இந்நாட்டில் தகவல் ஊடகங்களின் சுதந்திரம் எப்போதும் பறிப்பதும் அம்னோ தேசிய முன்னணி அரசாங்கத்தின் தகவல் ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

மாறாக இன்று வரை டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் மற்றும் டான்ஸ்ரீ ஷாஃபி அப்துல்லா ஆகிய இருவரும் சரவாக் ரெப்போட் ரிம9.5 மில்லியன் வங்கி கணக்கு பரிமாற்றம் குற்றச்சாட்டு அடிப்படையில் எந்த ஒரு பதில் அறிக்கை வெளியிடாமல் இருக்கிறார்கள். சரவாக் ரெப்போட் குற்றச்சாட்டு ஆவணங்கள் மற்றும் புள்ளி விவரங்கள் அடங்கி இருக்கிறது. ஆனால் மந்திரிகளின் பதில்கள் வெறும் வாய் சொல்லில் மட்டுமே இருப்பதாக தெரிகிறது.

இப்படிபட்ட பதில்கள் மந்திரிகள் கொடுத்தால் மக்கள் எப்படி நம்புவார்கள்? சரவாக் ரெப்போட் குற்றச்சாட்டு பொய்யாக இருந்தால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கலாம். எவ்வளவு நாட்கள் இந்நாட்டு மக்களை முட்டாள்களாக ஆக்க முடியும்?

வோல் ஸ்தீரிட் ஜெர்னல் அறிக்கையின் படி அமெரிக்கா அரசாங்கம் 1எம்டிபி பணத்தில் வாங்கியதாக லண்டனில் ஆடம்பர அடுக்குமாடி பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அமெரிக்கா நீதித்துறை இலாகா கடந்த ஜூன் 7-இல் நீதிமன்ற நடவடிக்கை எடுத்ததாக கூறியது மேற்குறிப்பிட்ட 1எம்டிபி சம்பந்தப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிகிறது. இந்த வழக்கு உலக ரீதியில் பேசப்பட்டாலும் நம் நாட்டில் கணக்கு மூடப்பட்ட நிலையில் இருக்கிறது.

மக்கள் யாரை நம்புவது என்று தெரியவில்லை.?

* அமினுடின் ஹாருன்

சிகாமட் சட்ட மன்ற உறுப்பினர்

மக்கள் நீதி கட்சியின் நெகிரி செம்பிலான் மாநில தலைவர்


Pengarang :