ECONOMYSELANGOR

மலேசிய பங்குச்சந்தை ஏற்றம் கண்டது

கோலா லம்பூர், ஜூன் 23:

மலேசிய பங்குச்சந்தை பரிவர்த்தனை தொடர்ந்து இலாபம் ஈட்டித்தரும் வகையில் ஏற்றம் கண்டது. இது முதலீட்டாளர்களின் ஆதரவு அதிகரித்து ஹோங்லியோங் மற்றும் மேய்பேங்க் போன்ற உயர்ந்த சொத்துடமை பங்கு கொண்ட நிறுவனங்கள் மீது நம்பிக்கையை காட்டுகிறது.

காலை மணி 9.01, எஃப்பிஎம் கெஎல்சிஎல்ஐ குறியீடு 1,777.43 இருந்து 1.81 புள்ளிகள் உயர்ந்து 1,779.24 ஆக ஏற்றம் கண்டது. முதன்மை குறியீடு 0.92 உயர்ந்த நிலையில் 1,778.35 ஆக ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே காலை மணி 9.30 வரையில் 205 கவுண்டர்கள் இலாப இலக்கை அடைந்து 124 கவுண்டர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் மேலும் 243 கவுண்டர்கள் வர்த்தகத்தில் ஈடுபடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மொத்த பங்குச்சந்தையின் மதிப்பீடு 207.977 அல்லது ரிம 91.511 மில்லியனை எட்டியது என அறிவிக்கப்பட்டது.

தகவல்: பெர்னாமா

#கேஜிஎஸ்


Pengarang :