SELANGOR

மாநில அரசாங்கத்தின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வு 50,000 வருகையாளர்களை எட்டும்

அம்பாங், ஜூன் 21:

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வு எதிர் வரும் ஜூலை 2 நடைபெற இருப்பதாகவும், ஏறக்குறைய 50,000 பொது மக்கள் வருகை புரிவார்கள் என்றும் அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தின் தலைவர் அப்துல் ஹமீத் ஹுசேன் கூறினார். தனது நகராண்மை கழகமான எம்பிஏஜே ஏற்பாடுகளை சிறப்பான முறையில் திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார்.

ஏறக்குறைய 100 பேருந்துகள் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள எல்லா மாவட்டங்களில் இருந்தும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வரும் வருகையாளர்களுக்கு ஏற்பாடு செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.

”   தற்போது கூடாரம் அமைக்கும் பணிகள் கட்டம் கட்டமாக நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சி அன்று, எல்ஆர்டியில் இருந்து ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவை வழங்கப்படும். 34 வகையான உணவுகள் பொது மக்கள் உண்டு களிக்க தயாராக உள்ளது,” என்று கூறினார்.

இந்த திறந்த இல்ல நிகழ்வை மேன்மை தங்கிய சிலாங்கூர் அரசர், சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா, பண்டான் இண்டா நகராண்மை கழக திடலில் எதிர் வரும் ஜூலை 2, 11 மணிக்கு அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பார்.

#கேஜிஎஸ்


Pengarang :