SELANGORUncategorized @ta

வழிபாட்டு தலங்கள் அரசியல் மேடைகள் அல்ல

ஷா ஆலம், ஜூன் 17:

வழிபாட்டு தலங்கள் சமயம் சார்ந்த மேம்பாடுகளின் பொக்கிசங்கள் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்தில்லை.ஆனால், மலேசியாவை பொருத்தமட்டில் கடந்தக்காலம் தொட்டும் இன்றைய நிகழ்காலம் வரை அம்னோ தொடர்ந்து ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் அரசியல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
அம்னோவின் அரசியல் தலமே பள்ளிவாசால்கள்தான் என்பதை நாம் மறுத்திட முடியாது. இப்படியிருக்கும் நிலையில் அண்மையில்  சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா பள்ளிவாசல் ஒன்றில் மாநில அரசின் நிதி உதவி கொடுக்க சென்ற போது அதனை பெரும் சர்ச்சையாக்கி சமய சாயம் பூசி பெரும் பரப்பரப்புக்குள்ளாக்கியதும் அம்னோ கோத்தா டாமான்சார சட்டமன்றத்தின் அம்னோ பிரதிநிதிதான் என்பதை சுட்டிகாட்டதான் வேண்டும்.
அரசாங்கத்தின் நிதியுதவி வழங்கியதையே அரசியல் ரீதியில் காழ்புணர்ச்சியோடு சம்மதப்பட்ட அம்னோ சட்டமன்ற உறுப்பினர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டார்.ஆனால்,அம்னோவின் பிரதமர்,துணைப்பிரதமர் உட்பட அதை சார்ந்தவர்கள் இன்றும் பள்ளிவாசல்களை அரசியல் மேடையாகதான் பயன்படுத்தி வருகிறார்கள்.டான்ஸ்ரீ நோர் ஓமார் தஞ்சோங் காராங் உட்பட பல்வேறு பள்ளிவாசல்கள்களில் அரசியல் பேசுவதையே தொடர் நடவடிக்கையாக கொண்டிருப்பதை மறுத்திட தான் முடியுமா?
அம்னோவின் இந்த பாணியை பயன்படுத்திதான் அன்மையக்காலமாய் மஇகாவும் அதன் அரசியல் விளையாட்டினை ஆலயங்களை நோக்கி குறி வைக்க தொடங்கி விட்டது.தங்களின் ஆட்சிக்காலத்தில் கோட்டை விட்டு விட்ட சீபில்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய விவகாரத்தில் இன்று போராடுவது போல மஇகாவினர் நாடகம் செய்வதும் நடப்பு மாநில அரசாங்கத்திற்கு எதிராக பதாகை ஏந்தி போராடுவதும் மஇகாவினரின் அரசியல் கோமாளிதனத்தின் உச்சம்.

ஷா ஆலாம் வட்டாரங்களில் அம்னோ தேசிய முன்னணி காலத்தில் பல ஆலயங்கள் அதன் வரலாற்றையும் அடையாளத்தை தொலைத்து விட்டன.அதில் ஒன்றுதான் இந்த சீபில்ட் ஆலயம்.தேசிய முன்னணியின் ஆட்சியின் போது அரசாங்கத்தின் பதவி வகித்த மஇகாவும் அதன் ஆட்சிக்குழு உறுப்பினர்களும் அன்றையக்காலக்கட்டத்தில் கோட்டை விட்டுவிட்டு தற்போது நீலிக்கண்ணீர் வடிப்பது வேடிக்கையானது.

சிலாங்கூர் மாநிலத்தில் ஆலய விவகாரங்களை சமூக உணர்வோடு நோக்காமல் எல்லாவற்றும் அரசியல் சாயம் பூசி மக்களை குழப்புவதே மஇகாவின் இன்றைய அரசியல் பிழைப்புவாதமாய் உள்ளது.ஆனால், மஇகாவின் அரசியல் பிழைப்புவாதத்தை மக்கள் நன்கு அறிந்து வைத்திருப்பதால் அவர்களின் சாயம் மக்களிடையே வெளுத்து விட்டது.இந்தியர்கள் மஇகா எனும் அரசியல் கட்சியை மறந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது என்பதுதான் உண்மை.

வழிபாட்டு தலங்களில் அரசியல் வேண்டாம் என அன்மையில் சிலாங்கூர் சுல்தான் ஆணை வெளியிட்டிருப்பது காலத்திற்கு ஏற்ற பெரும் சிந்தனை.சுல்தானின் ஆணையை பின்பற்றி நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் வழிபாட்டு தலங்களை சமய மேம்பாட்டு களமாக பயன்படுத்த வேண்டும்.அதைவிடுத்து வழிபாட்டு தலங்களை அரசியல் மேடையாக்கி அதன் உன்னதத்தை மாசுப்படுத்திட வேண்டாம்.
இதற்கிடையில்,இந்த சீபில்ட் ஆலய விவகாரத்தில் தங்களை பொது இயக்கங்கள் என்றும் அரசு சாரா இயக்கங்கள் என்றும் கூறிக்கொண்டு தேசிய முன்னணியின் கைபாவைகளாக செயல்படும் இயக்கங்கள் வீடியோ மற்றும் வட்சாப்க்கள் மூலம் மக்களுக்கு நல்லாட்சி வழங்கிக் கொண்டிருக்கும் சிலாங்கூர் மாநில நடப்பு அரசாங்கத்தை வீழ்த்துவோம் என முழங்கிக் கொண்டிருப்பதெல்லாம் அவர்களின் பகல் கனவாய்தான் போகும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை.
இந்த தேசிய முன்னணியின் கைபாவை பொது இயக்கங்களின் சூழ்ச்சியையும் வஞ்சகத்தையும் மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.சிலாங்கூரில் நல்லாட்சி வழங்கிக் கொண்டிருக்கும் நடப்பு அரசாங்கத்தை புத்ரா ஜெயாவை ஆள வைப்பதே மக்கள் பெரும் இலக்காக கொண்டிருக்கும் நிலையில் தேசிய முன்னணியின் கைபாவையாக செயல்படும் பொது இயக்கங்களின் வெற்று முழக்கங்கள் இங்கு எடுப்படாது.அவர்கள் அதனை தேசிய முன்னணியின் ஆட்சியிலுள்ள மாநிலங்களில் முழங்கிக் கொள்ளட்டும்.

சுல்தானின் ஆணைக்கு ஏற்ப வழிபாடு தலங்கள் சமய ரீதியிலான சிந்தனைக்கும் சித்தாந்ததிற்கும் மட்டுமே என்பதை அனைத்து தரப்பும் உணர்ந்து வழிபாட்டு தலங்கள் அரசியல் மேடைகள் அல்ல என்பதை உறுதி செய்ய வேண்டும்.

நன்றி
ஆசிரியர்


Pengarang :