NATIONAL

1எம்டிபி ஊழலில் அமெரிக்க நீதித்துறையின் குற்றச்சாட்டை வெளிப்படையாக மறுப்பு தெரிவிக்க வேண்டும் என கெஅடிலான் இளைஞர் அணி வலியுறுத்து

ஷா ஆலம், ஜூன் 29:

மத்திய அரசாங்கம் அமெரிக்க நீதித்துறையின் குற்றச்சாட்டை வெளிப்படையாக மறுப்பு தெரிவிக்க வேண்டும் என கெஅடிலான் கட்சியின் இளைஞர் அணியினர் வலியுறுத்துவதாக அதன் தேசிய தலைவர் நிக் நஸ்மி நிக் அமாட் கூறினார். அமெரிக்க நீதித்துறை தனது நாட்டின் பாதுகாப்பு மற்றும் நேர்மையான நிதி நிர்வாகத்தில் கிளிப்தோகிராட் தவறான வழியில் சொத்துடமை குவித்து வருவதை அனுமதிக்காது என்று அதன் நடவடிக்கையில் புலப்படுகிறது என்றார்.

அமெரிக்க நாட்டின் தலைமைத்துவம் மாறினாலும் 1எம்டிபி மீதான அமெரிக்க நீதித்துறையின் நடவடிக்கை நிலையாக உள்ளது என்று விவரித்தார்.

இதற்கு முன்பு, ஹாலிவுட் சினிமா பிரபலங்களான லியானார்டோ டிக்காப்ரியோ மற்றும் மிராண்டா கெர் ஆகியோர் ஜோ லோ பரிசளித்த பொருட்களை அமெரிக்க நீதித்துறையிடம் ஒப்படைத்தனர். ஜோ லோ, பிரதமர் நஜிப் ரசாக் மனைவியின் முதல் கணவரின் மகனான ரிஸா அஸிஸோடு 1எம்டிபி சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டில் முக்கிய நபர்களாக தேடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

” ஏன் இது வரை பிரதமர் வோல் ஸ்தீரிட் ஜெர்னல் 1எம்டிபி சார்பாக தன்னை அவதூறு கூறியதாக வழக்கு தொடுக்கவில்லை? மலேசிய நாட்டு மக்கள் உண்மையான தகவலை எதிர் பார்க்கிறார்கள். இது வரை எந்த ஒரு முறையான பதிலும் அரசாங்கத்திடம் இருந்து வரவில்லை,” என்று கூறினார்.

#கேஜிஎஸ்

=EZY=


Pengarang :