MEDIA STATEMENT

1எம்டிபி ஊழல் சம்பந்தப்பட்ட புதிய செய்தி அம்பலம், அம்னோவின் நிலைப்பாடு என்ன?

கெஅடிலான் இளைஞர் அணியினர், அமெரிக்கா நீதித்துறை இலாகாவின் அண்மைய நீதிமன்ற நடவடிக்கையின் வழி 1எம்டிபி பணத்தில் வாங்கிய சொத்துடமைகளை பறிமுதல் செய்யப்பட்ட செய்தியைகண்டு அதிர்ச்சி அடைகிறது. விலை உயர்ந்த சொத்துடமைகள் மற்றும் ஆபரணங்கள் வாங்கப்பட்ட நிலையில் அவை பிரபலமான அனைத்துலக மாடல் அழகி, மிரண்டா கேர் மற்றும் மலேசிய நாட்டின் மூத்த தலைவரின் மனைவி ஆகியோருக்கு பரிசாக வழங்கப்பட்டது ஆச்சரியம் தான். இந்த நிலை சுதந்திரம் பெற்றதிலிருந்து கண்டிராத மாபெரும் ஊழல் மற்றும் துஷ்பிரயோகம் நடந்தது என்று ஆதாரத்துடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கெஅடிலான் இளைஞர் பிரிவு இந்த அதிகார துஷ்பிரயோகத்தை கண்டிக்கும் வேளையில் நாட்டின் அட்டர்னி ஜெனரல் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் உடனடி சம்பந்தப்பட்ட மலேசியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கை நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் சம்பந்தப் பட்டு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அட்டர்னி ஜெனரல், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் அரசாங்க அதிகாரிகள் தங்களின் கடமையை உணர்ந்து மற்றும் நாட்டின் மீது பற்று கொண்டு சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். நாட்டின் உயரிய பொறுப்பில் உள்ள தலைவரின் பொது மக்கள் நிதியை மோசடி செய்ததைக் கண்டு அமைதி காட்டக் கூடாது. அரசாங்க அதிகாரிகளின் இயலாமையை கண்டு பொது மக்கள் நாட்டின் சட்ட திட்டம் மற்றும் நிர்வாகத்தின் மீது நம்பிக்கை இழந்த நிலை ஏற்படும்.

மேலும் கெஅடிலான் இளைஞர் அணியினர், இந்த ஊழல் விடயத்தில் அம்னோவின் இளைஞர் பிரிவு தலைவர் கைரி ஜமாலுதீன் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இது மிகச் சிறிய ஊழல் அல்ல மாறாக நாட்டின் நற்பெயரை களங்கப்படுத்தும் மாபெரும் நெருக்கடி நிலை ஏற்படுத்தி உள்ளது.

கெஅடிலான் இளைஞர் அணியினர், அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் 1எம்டிபி சம்பந்தப்பட்ட எந்த ஒரு நிதியுதவியும் பெற்றுள்ளாரா என்ற கேள்விக்கு முறையான விளக்கத்தையும் மற்றும் மறுப்பு அறிக்கையும் வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறது.

இதனிடையே கெஅடிலான் இளைஞர் அணியினர், நாட்டின் பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் சட்ட நடவடிக்கை எடுக்க இது வழி வகுத்து 1எம்டிபி பணம் மீண்டும் அரசாங்க கஜானாவில் கொண்டு சேர்க்க முடியும் என்று தெரிவித்தனர்.

* டாக்டர் ஹாபிஃப் பஹாருடின்

கெஅடிலான் கட்சியின் இளைஞர் அணியின் துணைத் தலைவர்

#கேஜிஎஸ்


Pengarang :