ANTARABANGSA

2027-இல் 255,000 விமானிகள் தேவைப்படும்

நியூ யோர்க், ஜூன் 21:

உலக ரீதியில் துரித வளர்ச்சி அடைந்து வரும் வர்த்தக விமான போக்குவரத்து சேவையில் விமானிகளின் தேவைகள் 2027-இல் 225,000 ஆக உயர்வு காணும் என்று கூறப்படுகிறது. விமானிகள் பயிற்சி அளிக்கும் நிறுவனமான சிஏஇ ரியூட்டர்ஸ் அனைத்துலக செய்தி நிறுவனத்திற்கு வெளியிட்ட அறிக்கையில் தற்போதைய பயிற்சி பெற்று வரும் விமானிகளின் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லை என்று கூறியது.

தேவைக்கு அளவிலான எண்ணிக்கையில் விமானிகள் இன்னும் பயிற்சி பெறவில்லை என்றும் அதிகரித்து வரும் பயணிகள் எண்ணிக்கை அடுத்த 20 ஆண்டுகளில் விமானிகளின் பற்றாக்குறை ஏற்படும் என்று அறிவித்துள்ளது.

சில அமெரிக்க விமானிகளின் தொழிற்சங்கள் கூறுகையில் புதிதாக வேலையில் சேரும் விமானிகள் வருமானம் குறைவாக இருப்பதால் இந்த வேலையை புறக்கணித்து வருகிறார்கள் என்று கூறியதாக ரியூட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

#கேஜிஎஸ்


Pengarang :