RENCANA PILIHANSELANGOR

ஆயர் சிலாங்கூர், புக்கிட் காசிங் சட்டமன்ற பகுதியில் நீர் குழாய் மாற்றும் பணிகள் தீவிரப்படுத்தப் படுகிறது

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 14:

சிலாங்கூர் நீர் நிர்வாக நிறுவனம் (ஆயர் சிலாங்கூர்) புக்கிட் காசிங் செக்சன் 5-இல் பழமையான குழாய்களை மாற்றும் நடவடிக்கை இன்று தொடங்கியது என புக்கிட் காசிங் சட்ட மன்ற உறுப்பினர் ராஜீவ் ரிக்ஷாகாரன் கூறினார். மாநில அரசாங்கத்தின் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் குழாய்கள் மாற்றும் நடவடிக்கை புக்கிட் காசிங் பகுதியில் ஏற்படும் குடிநீர் சிக்கலை தீர்க்க முடியும் என்றார்.

ஏழு கிலோ மீட்டர் தொலைவில் மாற்றப்படும் குழாய்கள் ரிம 6 மில்லியன் செலவில் கட்டப்பட இருப்பதாகவும் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் பணிகள் முடிவடையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது என்று மேம்பாட்டு பணிகளை பார்வையிடும் பொது ராஜீவ் செய்தியாளர்களிடம் கூறினார்.

IMG_20170614_105413

 

 

 

 

 

 

இதனிடையே, மேலும் கூறுகையில், இத்திட்டம் எதிர்பார்க்கப் பட்ட காலகட்டத்தில் மற்றும் மாநில அரசாங்கத்தின் தரத்திற்கு ஏற்ப இருக்கும் என்று கூறினார். குழாய் மாற்றும் நடவடிக்கைகள் பொது மக்களுக்கு கலந்துரையாடல் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தெரிவிக்கப்பட்டது என்று கூறினார்.

ஆயர் சிலாங்கூர், மாநிலத்தில் 84 இடங்களில் குழாய் மாற்றும் நடவடிக்கைகள் கடந்த மார்ச் மாதம் முதல் தனது பணிகளை செவ்வென செய்து கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :