ANTARABANGSA

அமெரிக்கா ரோந்து கப்பல் ஈரானிய கப்பல் மீது எச்சரிக்கைக்கு சுட்டது

வாஷிங்டன், ஜூலை 26:

அமெரிக்க கடற்படையை சேர்ந்த ரோந்துக் கப்பல் ஈரான் நாட்டு பாதுகாப்பு கப்பலை நோக்கி எச்சரிக்கைக்காக சுட்டது. இந்த சம்பவம் அரேபிய வளைகுடாவில் அமெரிக்க கப்பலை நெருங்கும் போது நடந்ததாக சொல்லப்பட்டது.

யூஎஸ்எஸ் தண்டர்போட், ஈரானிய கப்பல் 137 மீட்டர் தொலைவில் வந்த போது சுடும் படலம் ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. ஏஎப்ஃபி அனைத்துலக செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஈரானிய கப்பல் எந்த ஒரு தொடர்பு மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டதாக கூறியது.

”  ஈரானிய கப்பல் அனைத்துலக நடைமுறைகளை பின்பற்றி நடக்கவில்லை. மாறாக கப்பல்களிடையே மோதல்கள் ஏற்பட்டிருக்கும்,” என்று ஏஎப்ஃபி செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க கடற்படை, ஈரான் பாதுகாப்பற்ற மற்றும் தொழில்முறையற்ற தொடர்பு செய்ததாக கூறுகிறது. கடற்படை நடந்த சம்பவத்தை காணோளியாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட சம்பவம் ஏறக்குறைய காலை 3 மணி அளவில் வடக்கு அரேபிய வளைகுடாவில் நடந்தது. அமெரிக்க கப்பல் துப்பாக்கி சூடு நடத்திய பிறகே ஈரானிய கப்பல் நின்றதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக ஏஎப்ஃபி தெரிவித்தது.

இதனிடையே ஈரானிய அதிகாரிகள் அமெரிக்க கப்பல் வேண்டும் என்றே பிரச்சனையை உண்டாக்க சுட்டதாக கூறியது குறிப்பிடத்தக்கது.


Pengarang :