NATIONALRENCANA PILIHAN

அரசியலை விட்டு நஜிப்தான் விலகிச் செல்ல வேண்டும்

ஷா ஆலம், ஜூலை 10:

அம்னோ தேசிய இளைஞர் பிரிவு தலைவர் கைரி ஜமாலுதீன் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கை பதவி விலகிச் செல்லுமாறு ஆலோசனை கூற வேண்டும் என்று கெஅடிலான் கட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவர் நிக் நஸ்மி நிக் அமாட் கேட்டுக் கொண்டார். லஞ்ச ஊழல் மற்றும் பொருளாதார நிர்வாகக் கோளாறுகளில் சம்பந்தப்பட்ட நஜிப் பதவி விலகிச் செல்வதே சரியான நடவடிக்கை என்றார். அம்னோ பிஎன் அரசாங்கத் தலைவர்கள் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்றார்.

nik-nazmi

 

 

 

 

 

”   இப்படிப்பட்ட வேண்டுகோள் விடுத்துள்ளது அம்னோ தேசிய முன்னணி அரசாங்கத் தலைவர்கள் நாட்டின் வளங்களை தொடர்ந்து கொல்லை அடிப்பதற்காகவா? 1 மலேசியா மேம்பாட்டு நிறுவன (1எம்டிபி) மோசடி நம் நாட்டிற்கு போதும். நாட்டு மக்கள் எதிர் நோக்கும் வாழ்க்கை செலவீனங்கள், பொருட்களின் விலை உயர்வு, மான்யங்கள் குறைப்பு, பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), லஞ்ச ஊழல் மற்றும் நிதி நிர்வாக மோசடிகள் போன்றவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருக்கிறது. எதிர் வரும் பொதுத் தேர்தலில் நாட்டு மக்கள் சீர்தூக்கி பார்த்து கொல்லை அடிக்கும் கும்பலை நிராகரித்து, நேர்மையான மற்றும் வெளிப்படையாக அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்

இதற்கு முன்பு, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான கைரி ஜமாலுதீன் துன் மகாதீர் முகமட், டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் லிம் கிட் சியாங் ஆகியோர் அரசியலை விட்டு விலகிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிக் நஸ்மி கூறுகையில், கைரி இந்த கோரிக்கையை தனது கட்சியின் தலைவரிடம் வைக்க வேண்டும், மாறாக மக்கள் அதிகம் மதித்து போற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களை அல்ல என்று நினைவு படுத்தினார்.

”  கைரி, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துன் மகாதீர் முகமட் மற்றும் லிம் கிட் சியாங் ஆகியோரை பதவி விலகிச் செல்லுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஆனாலும், நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும், இந்த தலைவர்கள் அம்னோ தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் பிரச்சனைகளுக்கு போராட்டம் நடத்தி வருகின்றனர்,” என்று தெரிவித்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :