NATIONAL

அஸ்மின் அலி ‘அண்ணனின் தொகுதியில்’ களம் இறங்கினார்

OLEH ERMIZI MUHAMAD

பாசிர் கூடாங், ஜூலை 17:

சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி ஜோகூர் மாநில மக்களை சந்திப்பதற்கு பாசிர் கூடாங்கில் களம் இறங்கினார். ஜோகூர் மாநில கெஅடிலான் கட்சியின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வில் கலந்து கொள்ள ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் காலிட் நோர்டின் தொகுதியான பெர்மாஸ் ஜெயா சட்ட மன்றத்தில் நேரிடையாக பொது மக்களை சந்தித்து சிலாங்கூர் மாநிலத்தில் நடக்கும் மாற்றங்களை எடுத்து விளக்கினார்.

சிலாங்கூர் மந்திரி பெசாரின் அரசியல் வருகை அம்னோ தேசிய முன்னணியின் அடித்தளமாக விளங்கும் ஜோகூர் மாநிலத்தில் மறுமலர்ச்சி காற்று வீசும் என்று தெரிகிறது.

”  நான் இங்கு ஜோகூர் மாநில மந்திரி பெசாராக வரவில்லை மாறாக ஜோகூர் மாநில பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியில் பல தலைவர்கள் காலிட் நோர்டினை விட தகுதி வாய்ந்தவர்கள் நிறைய உள்ளனர்,” என்று பலத்த கரவொலியிடையே கூறினார்.

ஜோகூர் மந்திரி பெசாரின் சட்ட மன்ற தொகுதி பாசிர் கூடாங் நாடாளுமன்ற தொகுதியின் கீழ் உள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் பாசிர் கூடாங் நாடாளுமன்ற தொகுதியில் நோர்மாலா அப்துல் சமத் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அஸ்மின் அலி மேலும் கூறுகையில், அயராத உழைப்பால் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றார்.

இதனிடையே, கெஅடிலான் துணைத் தலைவருமான அஸ்மின் அலி லேடாங் நாடாளுமன்ற தொகுதியில் தஞ்சோங் காடிங் நகரத்தில் நடந்த நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வில் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு அன்பளிப்பு வழங்கினார்.

#கேஜிஎஸ்


Pengarang :