ECONOMYSELANGOR

இன்வெஸ்ட்: 90% எஸ்ஐஇ 2017-இன் கண்காட்சி அங்காடிகள் விற்று முடிந்தன booth

ஷா ஆலம், ஜூலை 19:

சிலாங்கூர் அனைத்துலக கண்காட்சி 2017 அனைத்துலக மற்றும் உள்ளூர் நிறுவனங்களின் ஆதரவு பிரமிக்க வைக்கும் நிலையில் உள்ளதாக சிலாங்கூர் முதலீட்டு நிறுவனத்தின் (இன்வெஸ்ட்) தலைமை செயல் அதிகாரி டத்தோ ஹாசன் அஸாரி இட்ரிஸ் கூறினார். செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் சிலாங்கூர் அனைத்துலக கண்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட அங்காடிகளில் 90% விற்று முடிந்ததாக விவரித்தார். இதில், 80% உள்ளூர் நிறுவனங்களும் மீதமுள்ள 20% வெளிநாட்டு நிறுவனங்களும் அடங்கும் என்றார்.

”   இதுவரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்பு பிரமாதமாக இருப்பதாகவும் மனநிறைவு அளிக்கும் வகையில் இருக்கிறது. சிலாங்கூர் அனைத்துலக கண்காட்சி 2017-இன் மொத்த அங்காடிகளும் விற்று முடிந்து விடும். கடந்த ஆண்டுகள் போல் சிறப்பான முறையில் திட்டமிட்டு வருகிறோம்,”என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

SIE2017 1

 

 

 

இன்வெஸ்ட் சிலாங்கூரின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார். நிகழ்ச்சியில் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மற்றும் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தேங் சாங் கிம் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#கேஜிஎஸ்

=EZY=


Pengarang :