ANTARABANGSA

உதவிகள் அனுப்பும் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் காணாமல் போனது

நியூ டெல்லி, ஜூலை 5:

வெள்ள நிவாரணப் பணிகளுக்காக சீன எல்லைப் பகுதியில் பறந்துக் கொண்டிருந்த இந்திய ஆகாயப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. ஏஎப்ஃபி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி தற்காப்புதுறை  அதிகாரிகளின் தகவலின் அடிப்படையில் ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக வடகிழக்கு இந்திய மாநிலமான அருணாசல பிரதேசத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

” அட்வான்ஸ் லைட் ஹெலிகாப்டர் தெஸ்பூர், அசாம் ஆகாயப்படை தலத்தில் ஏறக்குறைய 4 மணிக்கு புறப்பட்டது,” பெயர் குறிப்பிடாத அதிகாரி கூறினார்.

இதனிடையே, இந்திய உள்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு டிவிட்டரில் காணாமல் போன ராணுவ ஹெலிகாப்டரை தேடும் பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன என்று கூறினார்.

மேலும் கூறுகையில், சம்பந்தப்பட்ட ஹெலிகாப்டர் அருணாசல பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருட்களை கொண்டு சென்றதாக தெரிவித்தார்.

அருணாசல பிரதேசம் மற்றும் சில மாநிலங்களில் ஏற்பட்ட கடுமையான மழையினால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனிடையே சீனா மற்றும் இந்தியா எல்லைப் பகுதியில் குறிப்பாக வடகிழக்கு மலைப்பகுதியில் நிலைமை பதற்றமாக இருப்பதாகவும் இரண்டு நாடுகளும் ஒன்றின் மீது ஒன்று தங்களின் பிரதேசத்தை அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சாட்டி வருகின்றன.

#கேஜிஎஸ்


Pengarang :