SAINS & INOVASI

உலகத்தில் மிக நீண்ட பாலம், 550 வாகன சார்ஜ் நிலையத்தோடு கட்டப்படும்

குளோபல், ஜூலை 11:

உலகில் கடல் கடந்து கட்டப்படும் நீண்ட பாலமாக கருதப்படும் ஹோங்கோங் நாட்டில் 90 மில்லியன் யூவான் செலவில் நிர்மாணிக்கும் பணியில் உள்ளது. இதில் 550 வாகனங்கள் சார்ஜ் செய்யும் நிலையங்கள் சேர்த்து கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையங்கள் மின்சாரத்தில் இயங்கும் பேருந்து, விரைவு பேருந்து, கார் மற்றும் வாடகை கார் போன்றவை பயன்படுத்த முடியும் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

54.7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த பாலம் ஹோங்கோங், ஸூஹாய் மற்றும் மாச்சாவ் ஆகிய பகுதிகளை ஒருங்கிணைக்கும் என்றும் HK$112 பில்லியன் செலவில் 2011-இல் கட்டப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டில் பணிகள் முடிவடையும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

 

HK Bridge

இதனிடையே, இந்த பாலத்தின் மூலம் ஹோங்கோங் இருந்து ஸூஹாய் செல்லும் நேரம் 30 நிமிடமாக குறைக்கப்படும். பாலம் 420,000 டன் எடையுள்ள இரும்பை பயன்படுத்தி கட்டியுள்ளனர்.

 

Jambatan

#கேஜிஎஸ்


Pengarang :