ECONOMY

உலக எண்ணெய் உற்பத்தி மிக அதிகமாக குறையும் வாய்ப்பு உள்ளது

இஸ்தான்புல், ஜூலை 11:

உலகத்தின் எண்ணெய் வணிக முதலீடுகள் குறைந்ததாலும் மற்றும் புதிய எண்ணெய் வளங்களின் கண்டுபிடிப்புகள் இல்லாமல் போனதாலும் எண்ணெய் உற்பத்தி குறைய வாய்ப்பு உள்ளதாக சவுதி அராம்கோவின் தலைமை செயல் அதிகாரி அமீன் நஸீர் தெரிவித்தார்.

வழக்கமில்லாத ஸால் எண்ணெய் மற்றும் மற்ற எரிபொருள் சக்தி எதிர் காலத்தில் சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். ஆனாலும், இந்த முயற்சியை மேம்படுத்தி எண்ணெய் மற்றும் வாயுக்கு பதிலாக  மாற்றுச் சக்தியாக பயன்படுத்த காலம் இன்னும் வரவில்லை என்று நாஸீர் கூறினார்.

”  தூர நோக்கு காலகட்டத்தில்   எண்ணெய் தேவைகளை பூர்த்தி செய்ய முடியுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது,” என்று ரியூட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அவர் கூறியிருக்கிறார்.

”   நிதிநிலை முதலீட்டாளர்கள்  எண்ணெய் உற்பத்தி மற்றும் புதிய எண்ணெய் வளங்களை கண்டுபிடிப்பு போன்றவைகளில் நாட்டம் குறைந்த நிலையில் உள்ளது.

AS$ 1 திரிலியன்  (ரிம 4.2 திரிலியன்) முதலீடுகள் 2014-இல்  எண்ணெய் விலை கிடுகிடுவென குறைந்த வேளையில் காணாமல் போனது. சில ஆய்வுகளின் அடிப்படையில், ஒரு நாளைக்கு 20 மில்லியன் பீப்பாய் எண்ணெய் உலக மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.

#கேஜிஎஸ்


Pengarang :