PBTSELANGOR

எம்பிபிஜே 62,000 நகரும் குப்பைத் தொட்டிகளை விநியோகம் செய்தது

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 21:

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்தின் கீழ் குடியிருக்கும் பொது மக்களுக்கு 62,000 நகரும் குப்பைத் தொட்டிகளை எம்பிபிஜே இன்று விநியோகம் செய்தது என்று அதன் தலைவர் டத்தோ முகமட் அஸிஸி முகமட் ஜைன் கூறினார். இரண்டாம் கட்ட விநியோகம் செய்யப்பட்ட நகரும் குப்பைத் தொட்டிகள் 120 லிட்டர் அளவு கொண்டிருக்கும் என்று தெரிவித்தார். எம்பிபிஜே இத்திட்டத்திற்கு ரிம 8 மில்லியனை செலவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

”  இந்த நகரும் குப்பைத் தொட்டி விநியோகம், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் குப்பைகளை அகற்றும் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படவும் வழி வகுக்கும். இதன் மூலம் நேரிடையாக பெட்டாலிங் ஜெயா பகுதிகளில் சுத்தம் பேணிக் காக்கப்படும்,” என்று குப்பை தொட்டி விநியோகம் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

 

azizi

 

 

 

 

 

 

 

 

 

நகரும் குப்பைத் தொட்டிகள் மூலம் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் மிகச் சிறப்பான முறையில் செயல்பட உறுதி செய்கிறது.

#கேஜிஎஸ்


Pengarang :