SELANGOR

ஐடிஇ ஆய்வுகளை மேற்கொள்ள ஒருங்கிணைந்து செயல்படும்

ஷா ஆலம், ஜூலை 6:

டாருல் ஏசான் கல்லூரி (ஐடிஇ) ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள மற்ற தரப்பினருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது என்று அதன் துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் முகமட் ரிஸ்வான் ஓத்மான் கூறினார்.

ஐடிஇ, மாநில அரசாங்கத்திற்கு தனது சிந்தனையை அர்ப்பணித்துக் கொள்ளும் ஒரு மையமாக அமையும்.

”  ஐடிஇ இதுவரை எட்டு ஆய்வுகள் நடத்தி உள்ளது. அரசியல் கருத்துக்கணிப்பு மற்றும் தற்போதைய சூழ்நிலையில் ஏற்படும் பிரச்சனைகளை கொண்டு புள்ளியல் விவரங்களோடு தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளியிட்டு வருகிறது,” என்று ஐடிஇ கட்டிட திறப்புவிழா மற்றும் நோன்பு பெருநாள் விருந்து நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

சிலாங்கூரில் அரசியல் சூழ்நிலை கருத்துக்கணிப்பு, சிலாங்கூர் மக்களின் எண்ண கருத்துக்கணிப்பு, மலேசியா மக்களின் எண்ண கருத்துக்கணிப்பு, கிளாந்தான் மக்களின் எண்ண கருத்துக்கணிப்பு மற்றும் சுங்கை பெசார் இடைத் தேர்தல் முன்னிட்டு மக்களின் கருத்துக்கணிப்பு போன்ற ஆய்வுகள் ஐடிஇ இது வரை நடத்தி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

IMG_20170706_140214

 

 

 

 

 

 

 

 

 

” இந்த ஆண்டு பாதி வரை, ஐடிஇ 35,546 பேர்களை தனது ஆய்வுகள், கலந்துரையாடல், மாநாடு, கருத்தரங்குகள் மற்றும் புத்தக வெளியீட்டு விழா போன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்து உள்ளது. ஐந்து கூறுகளை உள்ளடக்கிய கொள்கைகள் கொண்டு ஐடிஇ செயல்படுகிறது. நாகரீகம், ஆராய்ச்சி, மக்களாட்சி தத்துவம் & பொருளாதாரம், அரசியல் கல்வி & மக்களாட்சி மற்றும் கல்வி & பண்பாடு போன்ற கூறுகள் அடிப்படையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது” என்று தெரிவித்தார்.

ஐடிஇ கட்டிட திறப்பு விழாவை   இன்று நண்பகலில் ஷா ஆலம் செக்சன் 15-இல் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :