SELANGOR

ஐபிஆர் திட்டங்களை மறுஆய்வு, மூத்த குடிமக்களுக்கு தொடர்ந்து உதவிகள்

ஷா ஆலம், ஜூலை 25:

பரிவுமிக்க மக்கள்நல திட்டங்களின்  (ஐபிஆர்) அமலாக்கத்தை மறுஆய்வு செய்து தகுதி வாய்ந்த மூத்த குடிமக்களுக்கு மேலும் நன்மைகளை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சிலாங்கூர் மாநில சமூக நலம், சுகாதாரம், மகளிர் மற்றும் குடும்ப நலன் ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி கூறினார். இந்த நடவடிக்கைகள் ரந்தாயான் மெஸ்ரா குழுமத்துடன் இணைந்து செயல் படுத்தப் படும் என்றார்.

மேலும் கூறுகையில், மெஸ்ரா ஊசியா எமாஸ் திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய உத்தேசித்து உள்ளதாக கூறினார். இதன் மூலம் நேரிடையாக மூத்த குடிமக்கள் நன்மைகள் அடைய வாய்ப்பு உள்ளது.

”  ஆர்எம்எஸ்பி மற்றும் யாவாஸ் நிர்வாகங்கள் இன்னும் புதிய பரிந்துரைகளை மாநில அரசாங்கத்திடம் விண்ணப்பிக்கவில்லை. மூத்த குடிமக்கள் தங்களின் வாழ்நாளில் இறுதி காலத்திற்கு முன்பு மாநில அரசாங்கத்தின் உதவி நிதிகளை குறிப்பாக ஏழைகளுக்கு கிடைக்க வழி வகுக்கும்,” என்று 13வது சிலாங்கூர் சட்ட மன்ற கூட்டத் தொடரில் தாமான் மேடான் சட்ட மன்ற உறுப்பினர் ஹானிஸா தல்ஹாவின் கேள்விக்கு பதில் அளிக்கையில் கூறினார்.

#கேஜிஎஸ்


Pengarang :