SUKANKINI

கார்துங்: சிறிய வெற்றியாக இருந்தாலும் ‘சிவப்பு எறும்பு’ மீண்டு எழுந்துள்ளது

ஷா ஆலம், ஜூலை:

‘தி’- தீம் உடன் கண்ட வெற்றிக்கு பிறகு, பிகேஎன்எஸ் எப்ஃசியின் ஆட்டத் திறன் மீண்டும் எழத் தொடங்கியது. நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் ‘தி’- தீமுடன் வெற்றி பெற்று மூன்று புள்ளிகளுடன் சூப்பர் லீக் பட்டியலில் தனது இடத்தை பிடித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

மிகக் குறுகிய கோல் வித்தியாசத்தில், 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை தக்க வைத்து கொண்டாலும், அதன் பயிற்சியாளர் சீவன் கார்துங் தனது ஆட்டக்காரர்கள் சிறந்த முறையில் ஆட்டத்தை வெளிப்படுத்தியது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்றார்.

 

GARTUNG1

 

 

 

 

 

 

 

 

 

இந்த ஆட்டத்தில், பிகேஎன்எஸ் எப்ஃசியின் கோல்களை 34-வது நிமிடத்தில் முகமட் ஹலீப் ஹைக்கால் மற்றும் 41-வது நிமிடத்தில் நிஸாம் அபு பாக்காரும் அடித்தனர். ‘தி’-தீம்மின் ஒரே கோலை 65-வது நிமிடத்தில் முகமட் ஹாஸ்ரூல் இப்ராஹிம் புகுத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் பிகேஎன்எஸ் அணியின் மூன்று புள்ளிகளை பெற்றது மட்டுமில்லாமல் தனது ஆட்டக்காரர்கள் மேலும் சிறந்த முறையில் ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்து வரும் ஆட்டங்களில் வெற்றி பெற்று சூப்பர் லீக் பட்டியலில் சிறந்த இடத்தை பிடிக்க போராடுவார்கள் என்று உறுதி கூறினார்.

PKNS FC (3)

 

 

 

 

 

 

கார்துங் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை எடுத்ததில் இருந்து பிகேஎன்எஸ் எப்ஃசி சரவாக் அணியுடன் 1-0 என்ற கோல் கணக்கிலும், அடுத்து மலேசிய கிண்ண ஆட்டத்தில் கோலா லம்பூர் அணியுடன் 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :