SELANGOR

கோத்தா அலாம் ஷா சட்ட மன்றத்தில் வெள்ளம் மற்றும் குப்பை அகற்றும் பிரச்சனைகள் கட்டுப்பாட்டில் உள்ளது

கிள்ளான், ஜூலை 10:

கோத்தா அலாம் ஷா சட்ட மன்ற தொகுதியில் திடக்கழிவு நிர்வாகம் சிறப்பான முறையில் திட்டமிட்டு நடந்து வருகிறது. ஹேபாட் அபாடி நிறுவனம் குப்பைகளை அகற்றும் பணியில் 80% பிரச்சனைகளை தீர்த்து விட்டனர் என்று கோத்தா அலாம் ஷா சட்ட மன்ற உறுப்பினர் கணபதி ராவ் கூறினார். இதன் அடிப்படையில் தாம் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

”   கடந்த இரண்டு ஆண்டுகளில், திடக்கழிவு நிர்வாகத்தில் பல்வேறு முன்னேற்றத்தைக் கொண்டுள்ளதாக கூறினார். இருந்தாலும், இன்னும் முயற்சிகள் எடுத்து குப்பைகளை அகற்றும் பணியில் சிறந்த அடைவை எட்டவேண்டும் என்று தெரிவித்தார்.

Ganabatirau

 

 

 

 

 

”   திடக்கழிவு நிர்வாகம் முழுமையாக வெற்றி பெற்றது என்று கூறிவிட முடியாது, ஆனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் எதிர்ப்பார்த்த இலக்கை அடைய முடியும்,” என்று கோத்தா அலாம் ஷா சட்ட மன்ற தொகுதியின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வுக்கு பிறகு சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் தோட்டத் தொழிலாளர், வறுமை ஒழிப்பு மற்றும் பரிவு மிக்க அரசாங்க ஆட்சிக் குழு உறுப்பினரும் ஆன கணபதி ராவ், தன்னுடைய தொகுதி வெள்ளப் பிரச்சனையை எதிர் நோக்கி வருகிறது. தாமான் மெலாவீஸ், தாமான் சீ லியோங், தாமான் சவுத்தர்ன் பார்க் மற்றும் தாமான் பாயூ பெர்டானா போன்ற பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடமைப்பு பகுதிகளாகும். இதுவரை சிலாங்கூர் மாநில நீர்ப்பாசன மற்றும் வடிகால் இலாகா மூலம் உடனடி நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று விவரித்தார்.

”  கிள்ளான் நகராண்மை கழகம் வெள்ளப் பிரச்சனைகளைக் களைய பெரிய உதவி வழங்குகிறது. இன்னும் சில வெள்ள தடுப்பு திட்டங்கள் தொடங்காமல் உள்ளது.

இதனிடையே, தனது தொகுதி போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது என்றார். கிள்ளான் மூன்றாவது பாலம் கட்டப்பட்ட பின் இந்நிலைமை மேலும் மோசமாகி விட்டது. ஆனாலும், ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவை மூலம் பொது மக்கள் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவ முடியும் என்று விவரித்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :