SELANGOR

கோத்தா கொமுனிங்கில் போக்குவரத்து நெரிசல் தீர்வு காணப்படும்

ஷா ஆலம், ஜூலை 19:

கோத்தா கொமுனிங்கில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் தீர்வினை ஏற்படுத்தவும் ஆக்கப்பூர்வ நடவடிக்கையில் சிலாங்கூர் மாநில அரசாங்கம் இறங்கியிருப்பதாகவும் அப்பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் வரும் ஆகஸ்டு மாதம் அந்த பணிகள் தொடங்கப்படும் என்றும் ஸ்ரீ மூடா சட்டமன்ற உறுப்பினர் சுஹாய்மி ஷாஃப்பி தெரிவித்தார்.
இதன் முதற்கட்ட பணிகள் 5 மில்லியன் செலவிலும் இரண்டாம் கட்ட பணிகள் 15 மில்லியன் செலவிலும் மேற்கொள்ளப்படும் என கூறிய இப்பிரச்னைக்கு நன் தீர்வு காண சுமார் 20 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

முதற்கட்ட பணிகள் இவ்வருடம் ஆகஸ்டு மாதம் தொடங்கும் நிலையில் அதன் முதற்கட்ட செயல்பாட்டினை மேற்கொள்ளும் குத்தகை நிறுவனம் சாலையை விரிவுப்படுத்துதல் மற்றும் மாற்று வழிகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகளில் தீவிர கவனம் செலுத்தும் என்றும் கூறினார்.தற்போது இரு பாதைகளாக இருப்பது மூன்று வழி பாதையாக உருமாற்றம் காணும் அதேவேளையில் பிரதான சாலையிலிருந்து மிக எளிதாய் கெசாஸ் விரைசாலை நோக்கி செல்வதற்கும் வழி செய்யப்படும்.
இத்திட்டங்கள் மூலம் வழக்கமாய் கோத்தா கொமுனிங் முதல் கொமுனிங் – ஷா ஆலாம் (LKSA) மற்றும் கெசாஸ் விரைவுசாலை (KESAS) ஆகியவை நோக்கி நிலவி வரும் சாலை நெரிசலுக்கு நன் தீர்வு காணப்படும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இதன் வழி இங்கு நிலவும் சாலை நெரிசலை தீர்வுக்கு கொண்டு வர முடியும் என நம்பிக்கை தெரிவித்த அவர் அடுத்தக்கட்டமாக சுமார் 90 மில்லியனில் மேம்பாலங்களை அமைக்கும் நடவடிக்கையும் விவேகமாய் அமையவிருப்பதாகவும் அவர் நினைவுக்கூர்ந்தார்.
இத்திட்டங்களுக்காக ஷா ஆலாம் மாநகராட்சி மூலமாக மாநில அரசிற்கு முறையான விண்ணப்பம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அஃது நமது இலக்கை எட்டும் எனவும் தாம் நம்புவதாக அவர் மேலும் கூறினார்.

#கேஜிஎஸ்


Pengarang :