RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூரின் கையிருப்பு 2019-இல் ரிம 5 பில்லியனை எட்டும்

ஷா ஆலம், ஜூலை 19:

சிலாங்கூர் மாநிலத்தின் கையிருப்பு 2020-க்குள் ரிம 5 பில்லியனை எட்டக் கூடிய ஆற்றல் உண்டு என்று முன்னாள் பேங்க் நெகாரா துணை கவர்னர், டாக்டர் ரோஸ்லி யாக்கோப் கூறினார். தற்போதைய அடைவுநிலை மற்றும் ஆற்றலை கொண்டு 2018-இல் மாநில அரசாங்கத்தின் கையிருப்பு ரிம 4.7 பில்லியன் வரை எட்டும் என்று தெரிவித்தார்.

”   2020-க்குள் அல்லது அதற்கு முன்பு சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கையிருப்பு ரிம 5 பில்லியன் அடையும் என்றும், இந்த ஆண்டு ரிம 4.5 பில்லியனை எட்டி விடும். 2018-இல் ரிம 4.7 பில்லியனை தொட்டு மேலும் கையிருப்பை அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும். சிலாங்கூர் மாநிலம் 2020-க்கு முன்பாகவே ரிம 5 பில்லியனை தொட்டு விடும். 2019-இல் இலக்கை அடைய முடியும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

Selangor-maju-1

 

 

 

 

 

திறன் மிக்க நிதி நிர்வாகம், மாநில அரசாங்கத்தின் கையிருப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்தது என்று கூறினால் மிகையாகாது. சிலாங்கூர் மாநிலம் மிக துரிதமான பொருளாதார வளர்ச்சி அடையும் மாநிலங்களில் முதலிடம் வகிக்கிறது என்றும் பல்வேறு துறைகளில் குறிப்பாக தொழில்துறை, உள்கட்டமைப்பு போன்றவையில் துரிதமாக வளர்ச்சி அடைந்து வருவதை யாரும் மறுக்க முடியாது என்று விவரித்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :