SELANGOR

சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் 2016-இன் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

ஷா ஆலம், ஜூலை 23:

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் 2016-இன் தமிழ்ப்பள்ளிகளுக்கான யூபிஎஸ்ஆர் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதிராவ் தலைமையில் கௌரவிக்கப்பட்டனர். மாநில அரசாங்கத்தின் தலைமையகத்தின் ஜூப்ளி பேராக் மண்டபத்தில் நடைபெற்ற வருடாந்திர நிகழ்ச்சியில் 241 மாணவர்களுக்கு வெகுமதி அளிக்கப்பட்டது.

யூபிஎஸ்ஆர் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களில் 6A 110 மாணவர்களும், 7A பெற்றவர்களின் எண்ணிக்கை 72 ஆகவும், அதேவேளையில் 8A பெற்றவர்கள் எண்ணிக்கை 59 குறிப்பிடத்தக்கது. “தோகோ குரு” என்று அழைக்கப்படும் ஆசிரியர் பணியில் சிறந்த முறையில் சேவையாற்றிய ஐந்து ஒய்வு பெற்ற ஆசிரியர்ககளுக்கு சிறப்புச் செய்யப்பட்டனர்.

பெற்றோர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், அரசு சார்பற்ற இயக்கங்கள் மற்றும் மாணவர்கள் என சுமார் 500 பேர் விழாவில் கலந்து கொண்டனர். கணபதி ராவ் உடன் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா ராசாயா, தெராத்தாய் சட்ட மன்ற உறுப்பினர் தியூ வே கேங், சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் நிக் அஸ்மி நிக் அமாட்டின் சிறப்பு செயலாளர் ம.உ.ராஜா மற்றும் மாநகராட்சி, நகராண்மை, மாவட்ட மன்ற உறுப்பினர்ககள், கிராமத்து தலைவர்ககள் மற்றும் சமுதாய இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

”  தமிழ்ப்பள்ளி மாணவர்களை அங்கீகாரம் கொடுப்பதற்காக நிகழ்ச்சி வருடாவருடம் ஏற்பாடு செய்து வருகிறோம். இந்த ஆண்டு ஐந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு “தோகோ குரு” விருதும் சிறப்பு தேர்ச்சி பெற்ற நான்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு சான்றிதழ் மற்றும் வெகுமதிகள் கொடுக்கப்பட்டது,” என்று கணபதி ராவ் சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

#கேஜிஎஸ்


Pengarang :