SELANGORYB ACTIVITIES

தலைவர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக வந்து காஜாங் திறந்த இல்ல நிகழ்வை சிறப்பு செய்தனர்

காஜாங், ஜூலை 15:

ஷாவால் மாத கொண்டாட்டம் தொடர்ந்து காஜாங் நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வின் மேலும் கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தனர். காலை 11 மணியில் இருந்து தொடங்கிய விருந்தோம்பல் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக இன, மத, வயது பேதமின்றி கலந்து கொண்டது மலேசியர்களின் நல்லிணக்கத்தை காட்டுகிறது.

காஜாங் சட்ட மன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறுகையில், இந்த நிகழ்ச்சி வருடாவருடம் பொது மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் ஒன்றிணைந்து கொண்டாடும் நிகழ்ச்சியாக இது அமைகிறது என்றார்.

”   நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வு அனைத்து இன மக்களிடையே ஆன உறவுகளை வளர்க்கும். அரசியல் சித்தாந்தங்களைத் தாண்டி மலேசியர் என்ற ரீதியில் அனைவரும் ஒருங்கிணைந்து கொண்டாடும் நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது,” என்று காஜாங் சட்ட மன்ற தொகுதி சேவை மையத்தின் முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

இதனிடையே, நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் ஆலோசகர் துன் மகாதீர் முகமட், சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா, சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா மற்றும் பல சமுதாய தலைவர்கள் பங்கேற்று நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தனர்.

#கேஜிஎஸ்


Pengarang :