SUKANKINI

தீப்பந்த ஓட்டம்: கைரி சிலாங்கூரின் பங்களிப்பை பாராட்டினார்

ஷா ஆலம், ஜூலை 31:

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பை கண்டு மகிழ்ச்சி அடைந்தார். இரண்டு அனைத்துலக விளையாட்டுகளில் ஈடுபட இருக்கும் தேசிய விளையாட்டாளர்களுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசாங்கத்தின் செயல்பாடுகளை கண்டு மனநிறைவு அடைவதாக கூறினார். தனது டிவிட்டரில் சிலாங்கூர் மாநில இளையோர், விளையாட்டு, பண்பாடு மற்றும் தொழில் முனைவர் மேம்பாட்டு ஆட்சிக் குழு உறுப்பினர் அமிரூடின் ஷாரி 29-வது சீ விளையாட்டு போட்டிக்கான தீப்பந்த ஓட்டத்தை பற்றிய விவரங்களை மறுப்பதிவு செய்து கைரி ஜமாலுதீன் பாராட்டியது அரசியல் சித்தாந்தங்களைத் தாண்டி செயல்படுவது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது.

” நன்றி மாண்புமிகு அமிரூடின்,” டிவிட்டரில் கைரி பதிவு செய்தார்.
KJ

டிவிட்டரில் அமிரூடின் மாநில அரசாங்கம் தொடர்ந்து தேசிய விளையாட்டாளர்களுக்கு ஆதரவு கொடுக்கும் என்று கூறினார்.

இதற்கு முன்பு, அமிரூடின் தீப்பந்தத்தை மாநில அரசாங்கச் செயலாளர் டத்தோ முகமட் அமீன் அமாட் ஆயாவிடம் ஒப்படைத்தார்.

மாநில தலைமையகத்தில் நடைபெற்ற ஓட்டத்தில் சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றத்தின் விளையாட்டாளர்கள், பிகேஎன்எஸ் எப்ஃசியின் விளையாட்டாளர்கள் மற்றும் 12 ஊராட்சி மன்றங்களின் பணியாளர்கள் என 100 பேர் கலந்து கொண்டனர். ஷா ஆலமில் தொடங்கி அடுத்து கோலா லங்காட்டிலும், அதனைத் தொடர்ந்து கோலா சிலாங்கூர், பெட்டாலிங், சபாக் பெர்னாம் மற்றும் செப்பாங் போன்ற மாவட்டங்களில் தீப்பந்த ஓட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுடுள்ளது.


Pengarang :