NATIONALRENCANA PILIHAN

துன் மகாதீரின் தலைமைத்துவம், பாக்காத்தான் ஹாராப்பானை புத்ராஜெயாவிற்கு கொண்டு செல்லும்

ஷா ஆலம், ஜூலை 14:

துன் டாக்டர் மகாதீர் முகமட், பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டது கூட்டணியை வலுப்படுத்தி, 14வது பொதுத் தேர்தலில் வழிநடத்த சிறந்த தலைமைத்துவத்தை ஏற்படுத்த முடியும் என்று கெஅடிலான் கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் உதவித் தலைவராக நியமனம் பெற்ற அஸ்மின், துன் மகாதீரின் நியமனம் பாக்காத்தான் ஒருமித்த கருத்து கொண்டு செயல்படுகிறது என்று காட்டுகிறது. மக்களின் உணர்வுகளை மதித்து ஒருங்கிணைந்த செயல்பாடுகள் அவசியம் என்று இந்த நியமனம் உறுதி செய்கிறது என்றார்.

”   துன் மகாதீர் நியமனத்திற்கு அனைத்து பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி கட்சிகளும் ஆதரவு அளித்தது நினைக்கும் பொழுது சந்தோஷமாக இருக்கிறது. பாக்காத்தான் ஆலோசகராக நியமிக்கப்பட்ட துன் மகாதீர் முகமட் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இதன் மூலம் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியில் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இல்லை  என்ற பேச்சுக்கே இடமில்லை. நாட்டு மக்களின் தேவைகளை உணர்ந்து பொதுத் தேர்தலை முன்வைத்து செயல்பட உறுதி பூண்டுள்ளோம். துன் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களின் மீது நம்பிக்கை மற்றும் எனது ஆதரவு உறுதி. புத்ராஜெயாவை வெற்றிக் கொள்ள அவரது தலைமைத்துவம் மிக அவசியம்,” என்று தெரிவித்தார்.

நேற்று, பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தங்களின் புதிய தலைமை த்துவத்தை அறிவித்துள்ளது. அதில் துன் மகாதீர் முகமட் மற்றும் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகிய இருவரையும் இணைத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :