NATIONAL

துன் மகாதீர், அன்வார் பிரதமர் ஆவதில் ஆதரவு

ஷா ஆலம், ஜூலை 7:

முன்னாள் பிரதமர், துன் மகாதீர் முகமட்,  கெஅடிலான் கட்சியின் ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அரச மன்னிப்பு கிடைத்தால் பிரதமர் ஆவதிற்கு ஆதரவு தருவதாக கூறினார். துன் மகாதீர், அண்மையில் லண்டன் பயணத்தின் போது ‘தெ கார்டியன்’ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளிக்கப்படும் போது கூறினார் என்று மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.

”  அன்வார் வழக்கில், நாம் நியாயமான தீர்ப்பு கிடைக்கவில்லை என்று வாதாடலாம். நீதிமன்றத்தில் கிடைத்த தீர்ப்பு நடப்பு அரசாங்கம் தலையீடு கண்டிப்பாக உள்ளது என்று தெரிகிறது. புத்ராஜெயாவில் அமையும் புதிய அரசாங்கம் மேன்மை தங்கிய பேரரசரிடம் நம்பத்தகுந்த ஆதாரங்களை எடுத்துக் காட்டினால் அன்வார் இப்ராஹிமிக்கு அரச மன்னிப்பு கிடைக்கும். இதன் அடிப்படையில், அன்வார் மீண்டும் அரசியலில் ஈடுபட்டு பிரதமர் ஆக முடியும். இதை நான் மறுக்கவில்லை,” என்று தெரிவித்தார்.

துன் மகாதீர் மேலும் கூறுகையில்,  அன்வார் பிரதமர் ஆவதில் தமக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை. விடுதலை பெற்றவுடன் அன்வார் நலன் பெற்று தீவிர அரசியலில் வருவார் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :