RENCANA PILIHANSELANGOR

தொகுதி எல்லை மறுசீரமைப்பு அறிக்கையை எஸ்பிஆர் தாக்கல் செய்யவில்லை, சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கு வெற்றி

கோலா லம்பூர், ஜூலை 5:

புதிய தொகுதி மறுசீரமைப்பு அறிக்கையை மலேசிய தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) வெளியிட கோலா லம்பூர் உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தடை உத்தரவை கோலா லம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி, மதிப்புமிக்க அஸிஸூல் அஸ்மி அட்னான் அனுமதி வழங்கி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூர் மாநில அரசாங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி மேற்கண்ட முடிவை அறிவித்தார். மலேசிய தேர்தல் ஆணையம் செக்சன் 8, 13வது பட்டியலின் படி தொகுதி மறுசீரமைப்பு செய்யும் நடைமுறை செல்லாது என்று தீர்ப்பளித்து நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்த பின்னரே மேற்கொள்ள முடியும் என்றார்.

CP2A0248-1280x853

 

 

 

 

 

 

இந்த தீர்ப்பு, மத்திய அரசாங்கம் 14வது பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில், தேசிய அளவில் தொகுதி மறுசீரமைப்பு அறிக்கைகள் வெளியிட தடை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, நீதிமன்ற தீர்ப்பை நேரிடையாக கேட்க வந்த சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, ” இது மலேசிய மக்களுக்கு கிடைத்த வெற்றி. மாநில அரசாங்கம் தனது மக்களின் உரிமையை  பாதுகாக்கவே இந்த வழக்கை தாக்கல் செய்தோம். எஸ்பிஆர் தொகுதி மறுசீரமைப்பு அறிக்கை எதையும் வெளியிட முடியாது,” என்று நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
CP2A0335-1280x853

 

 

 

 

 

 

இதற்கு முன்பு, சிலாங்கூர் மாநில அரசாங்கம் எஸ்பிஆர் வெளியிட்ட புதிய தொகுதி மறுசீரமைப்பு பரிந்துரையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற வழக்கு, எஸ்பிஆர் வெளியிட்ட அறிக்கையில் முழுமையான விவரங்கள் இல்லை என்றும், தனிப்பட்ட வாக்காளர், ஊராட்சி மன்றம் அல்லது மாநில அரசாங்கம் பிரதிநிதிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற நிலையில் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மலேசியா நாட்டின் கூட்டரசு  அரசியலமைப்பு சட்டத்தில் 113 (2) விதியை எஸ்பிஆர் பின்பற்றவில்லை மாறாக எதிராக செயல்பட்டுள்ளது.

#கேஜிஎஸ்


Pengarang :