MEDIA STATEMENT

நஜிப் தைரியத்துடன் துன் மகாதீருடன் பொது விவாதம் செய்ய வேண்டும்

தகவல் ஊடக அறிக்கை 

 

இன்வெஸ்ட் கெஎல் 2017 நிகழ்ச்சியில் பேசிய டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தலைமைத்துவத்தை தாக்கியது கேவலமாக உள்ளது. இப்படி எதிர்க்கட்சிகளை இழுத்து அரசியல் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ள நஜிப்பின் நிலைமையை நினைத்து ஆச்சரியம் அடைகிறோம்.

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி நாளுக்கு நாள் பலம் கூடி வருவதோடு அம்னோ தேசிய முன்னணியை வீழ்த்த தயாராகி விட்டது. இதே சமயத்தில் நஜிப் பல்வேறு ஊழல் வழக்குகள் மற்றும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நஜிப்பின் அறிக்கையை பார்க்கும் பொழுது 14-வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி வெற்றி பெற்று விடும் என்ற பயத்தில் இருப்பதை உணர்த்துகிறது. தேர்தலில் பாக்காத்தான் வெற்றி பெற்ற பிறகு கிளிப்தோகிராட் மற்றும் கொள்ளையர்கள் அனைவரும் நீதிக்கு முன் நிறுத்தப் படுவார்கள் என்று நஜிப்க்கு தெரியும்.

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் ஆற்றலை மற்றும் பலத்தையும் உதாசீனப் படுத்த வேண்டாம். ஒரு புதிய மலேசியாவை உருவாக்க முயற்சி எடுத்து வரும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியிடம் தேர்தலில் தோற்ற பிறகு ஆட்சியை நல்ல முறையில் ஒப்படைத்து விட்டு செல்ல உத்தேசிக்க வேண்டும்.

நஜிப் ரசாக் தைரியத்துடன் முன் வந்து பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் ஆலோசகர் துன் மகாதீர் முகமட் உடன் பொது விவாதம் செய்ய வரும்படி கேட்டுக் கொள்கிறேன். பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் மகாதீர் அவர்களுக்கு பதில் கொடுப்பதால் மட்டுமே நஜிப் தன் களங்கத்தை நீக்க முடியும்.

டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில்

மலேசியா நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தலைவர்

25 ஜூலை 2017

#கேஜிஎஸ்


Pengarang :