RENCANA PILIHANSELANGOR

நோ தீயணைப்பு நிலையம் தொடர்பில் அவதூறு, சிலாங்கூர் அரசு 75% வரிவிலக்கு கொடுத்துள்ளது

ஷா ஆலம், ஜூலை 11:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் இரண்டு தீயணைப்பு நிலையங்கள் கட்டும் இடத்திற்கு 75% நில வரிவிலக்கு அளித்தது. செதியா ஆலாம் மற்றும் புக்கிட் ராஹ்மான் புத்ரா ஆகிய பகுதிகளில் தீயணைப்பு நிலையம் கட்டும் தேவைகள் அதிகரித்து வருகிறது. சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி பேசுகையில்,  மேற்கண்ட வரிவிலக்கு மாநில அரசாங்கம் ஏற்றுக் கொண்டது, மக்களின் மீது கொண்ட அக்கறையை காட்டுகிறது என்று தெரிவித்தார்.

”   இந்த வரிவிலக்கினால் மாநில அரசாங்கம் மொத்தம்  ரிம 22,187,500.00-ஐ இழக்க நேரிடுகிறது. ஆனாலும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாநில அரசாங்கம் இந்த இழப்பை ஏற்றுக் கொள்கிறது,” என்று தெரிவித்தார்.

இதற்கு முன்பு, வீடமைப்பு மற்றும் ஊராட்சி, நகர நல்வாழ்வு துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ நோ ஒமார் வெளியிட்ட செய்தியில் மேற்கண்ட இரண்டு இடங்களுக்கு அதிகமான நிலவரி விதிக்கப்படுவதாக சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டி இருந்தார்.

நோ ஒமாரின் குற்றச்சாட்டை வெளிப்படையாக மறுப்பு தெரிவித்த சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, நோ மாநில அரசாங்கம் மீது களங்கப்படுத்தி வருகிறார் என்று கூறினார்.

”    டான்ஸ்ரீ நோ ஒமாரின் குற்றச்சாட்டை கண்டு கவலை அடைகிறோம். செதியா ஆலாம் மற்றும் புக்கிட் ராஹ்மான் புத்ரா தீயணைப்பு நிலையங்கள் கட்டும் இடத்திற்கு அதிகமாக நிலவரி விதிக்கப்படுவது பொய்யான செய்தி. இது ஒரு அவதூறாக வெளியிடப்படும் செய்தி. ஒரு அமைச்சராக இருந்துக் கொண்டு பொறுப்பற்ற முறையில் செயல்படுவது கண்டிக்கதக்கது,” என்று தெரிவித்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :