NATIONAL

பாக்காத்தான் அமைப்பு பேச்சு வார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது

அம்பாங், ஜூலை 3:

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் அமைப்பு சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் சுமூகமாக நடந்து வருவதோடு மற்றும் சில சீரமைப்புக்கு பின் அறிவிக்கப்படும் என்று கெஅடிலான் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். பேச்சு வார்த்தைகள் பதவிகள் அடிப்படையில் அமையவில்லை மாறாக 14வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் வெற்றியை நோக்கி அமைகிறது. கடைசியாக நடைபெற்ற பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் கூட்டத்தில் தாம் மெக்கா சென்றதினால் கலந்து கொள்ள இயலவில்லை. ஆனாலும் கெஅடிலான் தலைவர், டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் தம்மிடம் பேச்சு வார்த்தைகள் சுமூகமாக நடந்ததாக தெரிவித்தார். சில விவரங்களை சீரமைப்பு செய்ய வேண்டி இருக்கிறது. மேலும் 14வது பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் எல்லா தரப்பினரும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் கொண்டு எதிர் கொள்ள வேண்டும். பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் அமைப்பு வெறும் பதவி அடிப்படையில் மட்டும் அல்ல மாறாக தேர்தல் வாக்குறுதி மற்றும் தொகுதி பங்கீடுகள் போன்ற ஏற்பாடுகளும் அடங்கும்,” என்று தெரிவித்தார்.

பண்டான் இண்டா எம்பிஏஜே திடலில் சிலாங்கூர் மாநில நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வில் 50,000 பொது மக்களோடு கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

சிலாங்கூர் அரசர், மேன்மை தங்கிய சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா மற்றும் அவர்தம் துணைவியார் தெங்கு பெர்மைசூரி நோர்ஹாசிகீன் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டு பொது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். அரசத் தம்பதியருடன், மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மற்றும் ஆட்சிக் குழு உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அஸ்மின் அலி மேலும் கூறுகையில், பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி, தேசிய முன்னணியின் நடைமுறையை பின்பற்ற முடியாது மாறாக பாக்காத்தான் உறுப்புக் கட்சிகளின் பலத்தை ஒன்றிணைத்து ஒரு சிறந்த கூட்டணியை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

#கேஜிஎஸ்


Pengarang :