RENCANA PILIHANSELANGOR

மத்திய அரசாங்கம், சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் சாலைகளை பராமரிக்கும் முறையை பின்பற்ற வேண்டும்

ஷா ஆலம், ஜூலை 31:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் மாநில அரசாங்கத்தின் கீழ் செயல்படும் சாலைகளை பராமரிக்கும் முறையில் தோல்வி அடைந்துள்ளது என்று துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அமாட் ஜாஹிட் ஹாமிடியின் கூற்று தவறானது என்று உள்கட்டமைப்பு, பொது வசதிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் ஆட்சிக் குழு உறுப்பினர் ஜைடி அப்துல் தாலிப் கூறினார்.

பொதுப்பணித்துறை இலாகா, வடிகால் மற்றும் நீர்ப்பாசன இலாகா, 12 ஊராட்சி மன்றங்கள், ஒன்பது மாவட்ட மற்றும் நில அலுவலகம் போன்றவற்றிற்கு மாரீஸ்ஸீன் கீழ் 2017-இல் ரிம 600 மில்லியன் ஒதுக்கீடு செய்திருக்கிறது என்று விவரித்தார். இந்த நிதி ஒதுக்கீடு மத்திய அரசாங்கம் ஒதுக்கியுள்ள ரிம 498.38 விட அதிகம் என்று கூறினார்.

 

ybzaidy-2

 

 

 

 

 

ஜைடி மேலும் கூறுகையில், மாரீஸ் ஒதுக்கீடு நிதி மாநில சாலைகள் மறுசீரமைப்பு நிதியின் கீழ் செயல்படும் என்று தெரிவித்தார்.

jalan reko

 

 

 

 

 

”  மாநில அரசாங்கம், மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படும் மத்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் சாலைகளின் சூழ்நிலையை புரிந்து கொள்ள முடிகிறது.ஆனாலும் மாரீஸ் நிதி ஒதுக்கீடு மத்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் சாலைகளுக்கு பயன்படுத்தக் கூடாது. இது மத்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக உள்ளது,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

#கேஜிஎஸ்


Pengarang :