SELANGOR

மந்திரி பெசார், செப்பாங் மாவட்ட நில அலுவலகத்தின் திறந்த இல்ல நிகழ்வை சிறப்பு செய்தார்

செப்பாங், ஜூலை 17:

செப்பாங் மாவட்ட நில அலுவலகத்தின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் வருகையின் மூலம் கோலாகலமாக நடைபெற்றது. மாலை 2 மணிக்கு   மந்திரி பெசாரை செப்பாங் மாவட்ட அதிகாரி ரோஸ்லீனா முகமட் ஜானி, டெங்கில் சட்ட மன்ற ஒருங்கிணைப்பாளர் போர்ஹான் அபு சாமா மற்றும் மாவட்ட நில அலுவலகத்தின் மூத்த அதிகாரிகள் இன்முகத்துடன் வரவேற்றனர்.

செப்பாங் மாவட்ட நில அலுவலகம் ஏழு உணவு கடைகளையும், பெமாடாம் மற்றும் ஊதா கேப்பே மேலும் இரண்டு உணவு கடைகள் அமைத்து வருகையாளர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அஸ்மின் அலி, எதிர் வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் இந்தோனேசியா ஆசிய ஐஸ் ஸ்கேட் 2017 போட்டியில் கலந்து கொள்ளும் ஒரே சிறுமியான சி. ஸ்ரீ அபிராமியை ஊக்குவிக்கும் வகையில் சிலாங்கூர் கொடியை ஒப்படைத்து வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்திய சமுதாயத்தின் எதிர்கால நட்சத்திரமாக பிரகாசிக்கவிருக்கும் ஸ்ரீ அபிராமி மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் ஆசியோடு பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு, மந்திரி பெசார் மாவட்ட அதிகாரியோடு மக்கள் எதிர் நோக்கும் சிக்கல்களை பகிர்ந்து கொண்டார். எப்போதும் போல பணியாளர்கள் மற்றும் பொது மக்களோடு செல்ஃபி எடுத்துக் கொண்டு எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

#கேஜிஎஸ்

CP2A2489 CP2A2450


Pengarang :