RENCANA PILIHANSELANGOR

மாநில அரசாங்கம் பிபிஆர் குடியிருப்பாளர்களை விரட்டும் செயலைத் தடுக்கும்

ஷா ஆலம், ஜூலை 14:

மத்திய அரசாங்கம், லெம்பா சுபாங் 1 மக்கள் வீடமைப்பு திட்டத்தில் (பிபிஆர்) குடியிருக்கும் மக்களை விரட்டும் நடவடிக்கையை சிலாங்கூர் மாநில அரசாங்கம் தடுத்து நிறுத்தும் என்று மாநில வீடமைப்பு, கட்டிட நிர்வாகம் மற்றும் நகர நல்வாழ்வு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இஸ்கண்டர் அப்துல் சமத் கூறினார். மத்திய அரசாங்கம், பிபிஆர் குடியிருப்பில் வசிக்கும் மக்களை விரட்டும் உரிமை இல்லை, ஏனெனில் இன்னும் மாநில அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அவர்களிடம் ஒப்படைக்கவில்லை என்று விவரித்தார்.

மேலும், கடந்த ஜூலை 13-இல், மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தலைமையேற்ற சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை கூட்டத்தில் (எம்தெஸ்) பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் (எம்பிபிஜே) தொடர்ந்து பிபிஆர் குடியிருப்பை பேணிக் காக்க வேண்டும் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

iskandar01

 

 

 

 

 

”  சிலாங்கூர் மாநில அரசாங்கம் கடந்த 2001-இல் இருந்து செலவிட்டுள்ள தொகையான ரிம 60 மில்லியனை மத்திய அரசாங்கம் இழப்பீடாக வழங்கினால் பிபிஆர் குடியிருப்பு பகுதியை விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறது. மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்தின் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த குடியிருப்பில் விபத்து, காயங்கள் மற்றும் இறப்பு நடந்தால் மத்திய அரசாங்கம் பொறுப்பு ஏற்க வேண்டும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

இதற்கு முன்பு, இங்குள்ள குடியிருப்பாளர்கள் வீடமைப்பு மற்றும் ஊராட்சி மற்றும் நகர நல்வாழ்வு அமைச்சு எதிர் வரும் ஜூலை 22-க்குள் பதியவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வீடுகள் காலியாக அறிவிப்பு செய்து புதியவர்களுக்கு கொடுக்கப்படும் என்று பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்திடம் புகார் செய்தனர் குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :