ECONOMYRENCANA PILIHANSELANGOR

முதலீட்டை மேம்படுத்த தொடர்ந்து உறுதி, இலக்கை அடைய முயற்சிகள்

ஷா ஆலம், ஜூலை 1:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் இந்த ஆண்டிற்கான தனது முதலீடு இலக்கான ரிம 6.5 பில்லியனை அடைய உறுதிப் பூண்டுள்ளது என்று   மாநில முதலீடு, சிறு மற்றும் நடுத்தர தொழில், வாணிபம் மற்றும் போக்குவரத்து ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தேங் சாங் கிம் கூறினார். இந்த நோக்கத்திற்காக சிலாங்கூர் பிரதிநிதிகள் அடுத்து ஐரோப்பாவிற்கு வணிக முதலீடு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

”   இதுவரை மலேசிய முதலீடு மேம்பாட்டு வாரியம்  (மீடா) மொத்த முதலீடு புள்ளியல் விவரங்களை வெளியிடவில்லை, ஆனாலும் சிலாங்கூர் தனது இலக்கை அடைய முடியும். கடந்த இரண்டு ஆண்டுகளாக அயராத உழைப்பால் நாம் எதிர் பார்த்ததைவிடசிறப்பான அடைவுநிலை எட்டியது குறிப்பிடத்தக்கது. சிலாங்கூரின் முதலீடு தொகை ரிம 7.8 பில்லியன் அடைந்த நிலையில் நமது இலக்கு ரிம 6 பில்லியன் மட்டுமே,” என்று கூறினார்.

EKONOMI SELANGOR

 

 

 

 

”   சில நாடுகளை நாம் பட்டியல் இடப்பட்டுள்ளோம், ஆனாலும் உலகத்தின் தற்போதற்போதைய சூழ்நிலையை பொருத்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து முடிவு செய்வோம்.இது மட்டுமில்லாமல், ஆசியான் நாடுகளுக்கும் வாணிப பயணம் மேற்கொள்ள உத்தேசித்து உள்ளோம். கடந்த ஐந்து மாதங்களில் தைவான், சீனா, இந்தியா, ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டோம்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

இதனிடையே, மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, 2017-ஆம் ஆண்டு மத்திய அரசாங்கத்தின் பொருளாதாரம் நிலைத்தன்மையில்லாத இருப்பதால், மிகவும் சவால் கொண்டதாகவே இருக்கும் என்று தெரிவித்தார்.

ஆனாலும் சிலாங்கூர் தொடர்ந்து முதலீடுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது என்றார். உலக தரவரிசை பட்டியலில் ராட்சத நிறுவனங்களாக கருதப்படும் தோயோத்தா மற்றும் ரோல்ஸ் ரோய்ஸ் சிலாங்கூரில் பெரிய முதலீடு செய்து உள்ளது இமாலய சாதனை ஆகும் என்றார்.

மீபா இணையதளம் நிலவரப்படி, சிலாங்கூர் மொத்த முதலீடு ரிம 7,880,767,374 ஆக குறிப்பிட்டுள்ளது. ஜோகூர் மாநிலத்தை அடுத்து இரண்டாவது இடத்தில் சிலாங்கூர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :