ANTARABANGSA

ரிம 741 மில்லியன் லஞ்ச வழக்கு, ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை

ஜாகர்த்தா, ஜூலை 18:

இந்தோனேசியா ஊழல் தடுப்பு ஆணையம் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மின்னணு அடையாள அட்டை நடைமுறை படுத்தப் பட்டபோது  இந்தோனேசியா நாட்டிற்கு 2.3 திரிலியன் ரூபியா (ரிம 741 மில்லியன்) இழப்பு ஏற்பட காரணமாக இருந்தார் என்று விசாரணை நடத்தி வருகிறது. இந்தோனேசியா ஊழல் தடுப்பு ஆணையம் அந்த நாடாளுமன்ற உறுப்பினரை ‘எஸ்என்’ என்று குறிப்பிட்டுள்ளது. தகவல் ஊடகங்கள் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் மற்றும் கோல்கார் கட்சியின் தலைவர் சேட்யா நோவான்தோ என்று குறிப்பிட்டதாக அனைத்துலக செய்தி நிறுவனமான ரியூட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, கோல்கார் கட்சியின் பேச்சாளர், நூருல் அரீபீஃன் கூறுகையில், ” நாங்கள் இன்னும் இந்தோனேசியா ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ கடிதத்தை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறோம். அந்த கடிதத்தில் சேட்யா நோவான்தோ பெயர் சந்தேக நபராக குறிப்பிடப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும், கோல்கார் கட்சி சட்டத்தை மதித்து நடக்கும். குற்றம் நிருபிக்கப்படும் வரை நிரபராதி என்ற சட்ட மரபை மதித்து செயல்படுவோம், என்று கூறினார்.

KPK


Pengarang :