SELANGOR

லெம்பா சுபாங் அடுக்குமாடி குடியிருப்பு பிரச்சனைக்கு நோ ஒமார் முழுக் காரணம்

ஷா ஆலம், ஜூலை 19:

லெம்பா சுபாங் அடுக்குமாடி மக்கள் வீடமைப்பு 1 (பிபிஆர்) திட்டத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு முழுக் காரணகர்தாவாக இருந்து வருவது நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் டான்ஸ்ரீ நோ ஒமார் ஆகும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். நோ ஒமார் வேண்டும் என்றே பிரச்சனையை உருவாக்கி வருகிறார் என்று தெரிவித்தார்.

நோ ஒமார் இந்த அமைச்சின் பொறுப்பு வகித்தது முதல் மாநில அரசாங்கத்தை களங்கப்படுத்தி வருகிறார் என்றும் எல்லா பிரச்சினைகளிலும் அரசியல் ரீதியாக பார்க்கும் போக்கு தொடர்ந்து வருகிறார் என்று கூறினார்.

MB PEMBERITA

 

 

 

 

 

”   நோ ஒமாரின் நடவடிக்கைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டது. கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசாங்கம் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்தை லெம்பா சுபாங் பிபிஆர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை நிர்வகிக்க அனுமதி வழங்கியது. ஆனால், நோ அமைச்சரான பிறகு ஏன் பிரச்சனை வருகிறது. இதற்கு முன்பிருந்த அமைச்சர் பரஸ்பர மதிப்பும் மரியாதையும் கொண்டவராக இருந்தார். தற்போது அடாவடி கொண்டவர் ஒருவர் அமைச்சை தலைமை தாங்கி வருவதால் பல்வேறு வழிகளில் பிரச்சனைகளைக் கொண்டு வருகிறார். ஆகையால், நான் இது போன்ற செயல்பாடுகள் கொண்டவருடன் ஒத்துழைப்பு அளிக்க மாட்டேன்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

NOH PPR

 

 

 

 

”  எம்பிபிஜேவின் அனுமதி இல்லாமல் ஏன் நோ ஒமார் குண்டர் கும்பல் தலைவனைப் போல் அலுவலகத்தை திறந்தார்? ஒரு அமைச்சராக இருந்துக் கொண்டு பொறுப்பற்ற முறையில் செயல்படுவது கண்டிக்கதக்கது. மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். இது வரை எந்த ஒரு அமைச்சரும் நோ ஒமார் போன்ற செயல்படவில்லை. மாநில அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பேச்சு வார்த்தைகள் சுமூகமாக நடந்த வேளையில் பொறுப்புள்ள முறையில் நிர்வாகம் செய்ய வேண்டும்,” என்று அஸ்மின் அலி சிலாங்கூர் இஸ்லாமிய மன்றத்தின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வில் கலந்து கொண்ட பின் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :