ANTARABANGSA

வடகொரியா எரிபடை சோதனை, ஐக்கிய நாடுகள் சபையின் அவசர கூட்டம்

உலகம், ஜூலை 5:

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றம், வடகொரியா நடத்திய கண்டங்கள் தாண்டி பாயும் எரிபடை பரிசோதனையை தொட்டு அவசர கூட்டத்தை இன்று ஏற்பாடு செய்ய உத்தேசித்து உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதரான நிக்கி ஹேலே பாதுகாப்பு மன்றத்தின் தலைவரான சீனாவின் லீயூ ஜீயீயை தொடர்பு கொண்டு அவசர கூட்டத்திற்கு இன்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக அனைத்துலக செய்தி நிறுவனமான ஏஎப்ஃபி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பு, சீனா வடகொரியா உடன் உலக வல்லரசு நாடுகள் பேச்சு வார்த்தை நடத்தி அணு ஆயுத திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியது, ஆனாலும் அமெரிக்கா பியோங்யாங் உடனடியாக எரிபடை மற்றும் அணு ஆயுத பரிசோதனையை நிறுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு, ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் வடகொரியா நடத்திய வெகு தூரம் பாயும் எரிபடை பரிசோதனையை கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

 

DD4UGLwXgAAMfdA

 

 

 

 

 

”   வடகொரியா நடத்தி எரிபடை பரிசோதனை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றத்தின் தீர்மானத்திற்கு எதிரானது என்றும் சூழ்நிலையை மேலும் மோசமாகி விடும்,” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்கா தற்காப்பு செயலாளர், ரெக்ஸ் தில்லர்ஸன் வடகொரியா முதல் முறையாக கண்டங்கள் தாண்டி பாயும் எரிபடை பரிசோதனை செய்துள்ளதாக உறுதிப் படுத்தினார். இந்த பரிசோதனையின் மூலம் வடகொரியா அமெரிக்க நாட்டிற்கு ஆபத்து ஏற்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளது. இதனால், அமெரிக்கா ஒரு போதும் அணு ஆயுத திட்டத்தை கொண்ட வடகொரியாவை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது.

#கேஜிஎஸ்


Pengarang :