PBTSELANGOR

ஷா ஆலமில் 15 கிமீ சைக்கிள் ஓட்டப் பாதை

ஷா ஆலம், ஜூலை 11:

அடுத்த ஆண்டிற்கான ஒதுக்கீட்டில் ரிம 2.4 மில்லியன் செலவில் 15 கிலோமீட்டர் தொலைவில் சைக்கிள் ஓட்டப் பாதை ஷா ஆலம் மாநகரில் அமைக்கப் படும் என்று ஷா ஆலம் மாநகர மேயர் டத்தோ அமாட் ஷாரின் முகமட் சாட் கூறினார். இந்தத் திட்டம் முன்னேற்றம் அடைந்த நாடுகளை பின்பற்றி அமைக்கப் பட்டுள்ளது. ஆம்ஸ்ட்டர்டாம், மிலான் மற்றும் மெல்போர்ன் போன்ற நாடுகளில் இது போன்ற பாதைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

”  இந்த சைக்கிள் ஓட்டப் பாதை, அதை விட சிறந்த நிலையில் சாலையை ஒட்டி அமைந்திருக்கிறது. எம்பிஎஸ்ஏ சைக்கிள் ஓட்டப் பாதை மற்றும் சாலையை வித்தியாசப்படுத்த வெவ்வேறு வர்ணத்தில் இருக்கும். இது பாதுகாப்பு அம்சத்தில் கொண்டு செய்யப்பட்டது,” என்று கார்பன் குறைந்த மாநகரம் ஷா ஆலம் 2017 அதிகாரப்பூர்வ தொடக்க விழாவிற்கு பிறகு செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.

MBSA

 

 

 

 

 

அமாட் ஷாரின் மேலும் கூறுகையில், நகரத்தில் மையப் பகுதியில் அமைந்துள்ள சாலைகளான பெர்சியாரான் டத்தோ மெந்திரி, பெர்சியாரான் பண்டாராயா மற்றும் அருகாமையில் உள்ள சாலைகளும் இந்த சைக்கிள் ஓட்டப் பாதை திட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளது என்று விவரித்தார். நகர மக்கள் சைக்கிள் உபயோகித்து, கார்பன் பயன்பாட்டை குறைக்க இலக்கை கொண்டு செயல்படுவதாக கூறினார்.

#கேஜிஎஸ்


Pengarang :