RENCANA PILIHANSELANGOR

ஹிஜ்ரா சிலாங்கூரின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வில் மந்திரி பெசார் மற்றும் மாநில தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

ஷா ஆலம், ஜூலை 12:

ஹிஜ்ரா சிலாங்கூரின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வுக்கு சிலாங்கூர் மாநிலத்தின் எல்லா இடங்களிலும் இருந்து வருகையாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தனர். ஹிஜ்ரா சிலாங்கூரின் தலைமையகத்தில் நடைபெற்ற விருந்தோம்பல், மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மற்றும் சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். டாக்டர் டரோயா அல்வி, அமிரூடின் ஷாரி, டத்தோ தேங் சாங் கிம் மற்றும் மந்திரி பெசாரின் அரசியல் செயலாளரும் ஸ்ரீ மூடா சட்ட மன்ற உறுப்பினருமான சுஹாய்மி ஷாஃபி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரமுகர்கள் ஆவார்.

ஹிஜ்ரா சிலாங்கூரின் தலைவர், டத்தோ மன்சூர் ஓத்மான், தலைமை செயல் அதிகாரி ரோஸ்லிம் முகமட் ஹாகிர் மற்றும் துணை தலைமை செயல் அதிகாரி நோர்மைஸா யாயா ஆகியோர் வருகையாளர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தனர்.

 

MB HIJRAH1

 

 

 

 

 

சிலாங்கூர் இன்றுக்கு பேசிய மன்சூர், இந்த தடவை நடந்த விருந்தோம்பலில் பல வியாபாரிகள் தங்களின் பொருட்களை விளம்பரப்படுத்தினர் என்று கூறினார்.

”   ஹிஜ்ரா வியாபாரிகள் தங்களின் உணவுப் பொருட்களை விளம்பரப்படுத்தும் ஒரு தலமாக நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வு அமைந்துள்ளது. ஆனாலும், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அழைப்பு நீண்டகால அடிப்படையில் அமைந்தது. உள்ளூர் வணிகர்கள் மற்றும் ஹிஜ்ரா சிலாங்கூரும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் செய்ய இது வழி வகுக்கும்.

2008-இல் ஆரம்பிக்கப் பட்ட மிம்பார், ஸ்கிம்செல் மற்றும் வாலா ஆகிய கடனுதவி திட்டங்கள் இன்று ஹிஜ்ரா சிலாங்கூர் என்று பெயர் மாற்றம் கண்டுள்ளது. தற்போது பரிவுமிக்க மக்கள்நல செயல்பாடுகளின் (ஐபிஆர்) கீழ் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :