ECONOMYRENCANA PILIHANSELANGOR

38,000 ஹிஜ்ரா சிலாங்கூர் பங்களிப்பாளர்கள் ரிம232 மில்லியன் கடனுதவி பெற்றுள்ளனர்

ஷா ஆலம், ஜூலை 12:

ஹிஜ்ரா சிலாங்கூர் சிறு கடனுதவி திட்டம் 38,000 சிறுதொழில் வியாபாரிகளுக்கு மொத்தம் ரிம 232 மில்லியன் வியாபார முதலீடுகளை இரண்டாம் கால் ஆண்டு வரை கொடுத்துள்ளது என்று ஹிஜ்ரா சிலாங்கூரின் நிர்வாகத் தலைவர்   டத்தோ டாக்டர் மன்சூர் ஓத்மான் கூறினார். 2017-குள் 56,000 வர்த்தகர்களை இத்திட்டத்தில் பங்கு பெற வைக்கும் முயற்சி வெற்றியடையும் என்று தெரிவித்தார்.

”  சிறுதொழில் கடனுதவி திட்டம் மாநில அரசாங்கத்தின் கீழ் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் புதிய பரிமாணத்தோடு வெற்றிகரமாக நிறைவேற்ற பட்டுள்ளது. இத்திட்டம் அறிமுகப்படுத்தியதில் இருந்து பல்வேறு வழிகளில் வெற்றி பெற்றது சரித்திரமாகும். நடுத்தர வர்க்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் முயற்சி தற்போது பயன் அளித்து வருகிறது. சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு நிலைப்பாட்டை இது மேலும் வலுப்படுத்தும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மற்றும் சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். டாக்டர் டரோயா அல்வி, அமிரூடின் ஷாரி, டத்தோ தேங் சாங் கிம் மற்றும் மந்திரி பெசாரின் அரசியல் செயலாளரும் ஸ்ரீ மூடா சட்ட மன்ற உறுப்பினருமான சுஹாய்மி ஷாஃபி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரமுகர்கள் ஆவார்.

 

2008-இல் ஆரம்பிக்கப் பட்ட மிம்பார், ஸ்கிம்செல் மற்றும் வாலா ஆகிய கடனுதவி திட்டங்கள் இன்று ஹிஜ்ரா சிலாங்கூர் என்று பெயர் மாற்றம் கண்டுள்ளது. தற்போது பரிவுமிக்க மக்கள்நல செயல்பாடுகளின் (ஐபிஆர்) கீழ் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்

 


Pengarang :