Selangorkini
RENCANA PILIHAN SELANGOR

சிலாங்கூர் விளையாட்டாளர்கள் இதுவரை 74 பதக்கங்களை சீ போட்டியில் வென்றுள்ளனர்

டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி 

2017 சீ விளையாட்டு போட்டியில் சிறந்த முறையில் முயற்சி எடுத்து வெற்றி பெற்ற அனைவருக்கும் குறிப்பாக சிலாங்கூர் விளையாட்டாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

எல்லா விளையாட்டிலும் வெற்றி தோல்விகள் சகஜம், அதில் மிக முக்கியமானது சவால்களை எதிர்கொண்டு போட்டியிடும் உணர்வு நம்மிடையே இருக்க வேண்டும்.

2017 சீ விளையாட்டு போட்டியில் 142 சிலாங்கூர் வீரர்கள் கலந்து கொண்டு 74 பதக்கங்களை 41 விதமான விளையாட்டு போட்டிகளில் பெற்றுத் தந்துள்ளனர்.

 

sukan sea kl

 

 

இதில் 31 தங்கம், 23 வெள்ளி மற்றும் 20 வெண்கலப் பதக்கங்களை வென்று மலேசியா 111 தங்கப்பதக்கங்களை பெறும் இலக்கை அடைய சிலாங்கூர் விளையாட்டாளர்கள் அர்ப்பணித்து உள்ளனர்.

சிலாங்கூர் விளையாட்டாளர்களின் இந்த வெற்றியானது மாநில அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட மேம்பாட்டு திட்டங்களே ஆகும். விளையாட்டாளர்கள் அடைந்த வெற்றி தொடர்ந்து மாநில அரசாங்கத்தின் நன்முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம்.

#கேஜிஎஸ்


Pengarang :