Selangorkini
NATIONAL

பெரும் பாதிப்பில் இரப்பர் தொழிலாளிகள்

ccsb-ads

சிகாமட், ஆகஸ்ட் 9:
தொடரும் இரப்பர் விலையின் வீழ்ழ்சியால் இரப்பர் மரத்தொழிலாளிகள் பெரும் பாதிப்பினை சந்தித்து வருகிறார்கள்.குறிப்பாக ஜோகூர் மாநிலத்தில் சிகாமாட் மற்றும் லாபீஸ் ஆகிய வட்டாரங்களில் அதனை கண்கூடாய் காண முடிவதாகவும் கெஅடிலான் கட்சியின் டத்தோஸ்ரீ சந்தாரா குறிப்பிட்டார்.

தொடர்ந்து இலையுதிர்வும் நிகழ்வதால் சிறுத்தோட்டக்காரர்கள் தங்களின் வருமானத்தில் 50 விழுகாடு சரிவினை எதிர்நோக்குவதாகவும் அவர் மேலும் நினைவுக்கூர்ந்தார்.
இதற்கு முன்னர் 1.2ஹக்டர் நிலத்தில் அதன் உரிமையாளருக்கு கிடைத்து வந்த 60 முதல் 70 கிலோ கிராம் இரப்பர் பால் தற்போதைய நிலையில் வெறும் 30 கிலோ கிராம் மட்டுமே கிடைப்பதாகவும் அவர் சுட்டிக்காண்பித்தார்.

இலையுதிர் விவாகாரத்தை அவ்வளவு எளிதான ஒன்றாக கருதிடக்கூடாது என குறிப்பிட்ட அவர் இதனை சீரியஸ்சான விவகாரமாய் கருதி ஆக்கப்பூர்வ ஆய்வினை மேற்கொள்ளவும் வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதில் ரிஸ்டா அதன் பங்களிப்பையும் ஆக்கப்பூர்வ செயல்பாட்டினையும் முன் எடுக்க வேண்டும் எனவும் நினைவுறுத்திய அவர் ரிஸ்டாவின் இலக்கே சிறுத்தோட்டக்காரர்களின் வருமானத்தை வரும் 2020இல் மாதம் ஒன்றுக்கு வெ.4000 ஆக உறுதி செய்வதுதான் என்றும் சுட்டிக்காண்பித்தார்.
இருப்பினும் இன்றைய சூழலில் அந்த இலக்கை எட்டுவது இயலாத ஒன்றாகவே கருதப்படுகிறது என்றார்.நடப்பில் இரப்பர் பாலின் எடையும் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் அதன் விலையும் கிலோவிற்கு வெ.2 ஆக இருக்கும் பட்சத்தில் இரப்பர் தொழிலாளிகளும் சிறுத்தொட்டக்காரர்களும் பெரும் விளைவினை சந்தித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி மற்றும் அதிகரித்து வரும் விலையேற்றம் பொருளாதார நெருக்கடி ஆகியவையோடு ஒப்பிடுகையில் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் சிரமத்தில் சிக்குண்டுள்ளது.
இந்நிலையில் சிறுத்தோட்ட மலாய்காரர்களின் வாழ்வாதாரம் பெரும் சவால் மிக்கதாய் அமைந்துள்ளது.அவர்களின் அன்றாட வருமானம் ஒவ்வொரு நாளையும் கடப்பதற்கு போதுமானதாய் இல்லை.

அண்மையில்  இரப்பர் விலை கிலோவிற்கு வெ.4 ஆக உயர்ந்திருந்தாலும் இரப்பரின் உற்பத்தி குறைந்துள்ள சூழலில் அஃது போதுமான வருமானத்தை கொடுக்கவில்லை என்பதுதான் இயல்பியல் உண்மை.
இன்றைய சூழலில் மாத அடிப்படை சம்பளம் வெ.1000 மாக இருக்கும் பட்சத்தில் அரசாங்கம் நிர்ணயம் செய்த மாத வருமானத்தை கூட எட்ட முடியாமல் இரப்பர் தொழிலாளிகள் அல்லல்ப்படுகிறார்கள் என்றார்.

இப்பிரச்னை இவ்வாண்டு தொடக்கம் தலைத்தூக்கி இருந்தாலும் இதுவரை இதனை களைய ரிஸ்டா இதுவரை எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையினை மேற்கொள்ளாதது ஏன் எனுக் கேள்வியையும் டத்தோஸ்ரீ சந்தாரா முன் வைத்தார்.சிறுத்தோட்ட உரிமையாளர்கள் மற்றும் இரப்பர் தொழிலாளிகளின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தேசிய இரப்பர் மற்றும் சிறுத்தோட்ட உரிமையாளர் கூட்டுறவுக் கழகத்தின் தலைவர் டத்தோ ஸம்ரி யாக்கோப் கூறியிருந்தாலும் இம்மாதிரியான பிரச்னைகளை களைவதில் தான் அவர்கள் முதன்மை கவனம் செலுத்த வேண்டும் என்றும் நினைவுறுத்தினார்.

உலக அளவில் இரப்பர் உற்பத்தியில் மலேசியா ஐந்தாவது இடத்தை கொண்டிருப்பது பெருமிதம் அளித்தாலும் கடந்த 2013ஆம் ஆண்டு வெ.1 முதல் வெ.2 வரை கிலோவிற்கு தொடர்ந்து கடந்தாண்டு நவம்பர் மாதம் வரை நிலைக்கொண்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மக்களுக்கு பெரும் பிரச்னையாக நீடித்துக் கொண்டிருக்கும் இதில் தூர நோக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.அலட்சியம் தொடர்ந்தால் இரப்பர் தொழிலாளியும் சிறுத்தோட்ட உற்பத்தியாளர்களும் பெரும் நெருக்கடியை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தார்.

இப்பிரச்னைக்கு நன் முறையில் தீர்வு காணும் வரை இரப்பர் ஊழியர்கள் மற்றும் அது சார்ந்தவர்களுக்கு வெ.1200 சிறப்பு ஊதியமாய் முன்னெடுப்பது விவேகமானதாய் அமையும்.இதன் மூலம் நாட்டின் இரப்பர் உற்பத்தியும் அது சார்ந்த வருமானமும் சரியான இலக்கை நோக்கி கொண்டு செல்ல முடியும் என்றும் டத்தோஸ்ரீ சந்தாரா ஆலோசனை வழங்கினார்.

#கேஜிஎஸ்


Pengarang :