ALAM SEKITAR & CUACA

அமெரிக்கா, ஐரோப்பாவை போல் மலேசியாவும் வெப்பத்தினால் பாதிக்கப்படுமா?

ஷா ஆலம், ஆகஸ்ட் 2:

‘வெப்பம்’ என்ற சொல் தற்போது எல்லோருடைய சிந்தனையிலும் உதிர்ந்து கொண்டிருக்கிறது, குறிப்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் மக்களை பெரிதும் பாதிக்கிறது.

அடுத்த வாரம் பிரிட்டனில் வெப்பம் 32°C ஆகவும் இத்தாலியில் 40°C மேற்பட்ட நிலையில் இருக்கும் என்று வானிலை ஆய்வு அறிக்கை கூறுகிறது.

மலேசியா, வட ஹெமிஸ்பேராவில் ஏற்படும் வெப்ப அலைகளினால் பாதிக்கப்பட போவதில்லை, ஆனாலும் தென் மேற்கு பருவ வெயில் காற்றின் தாக்கத்தால் வெப்பம் அதிகரிக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வு துறை இலாகா கூறியது.

”  தற்போது உள்ள வெப்ப சூழ்நிலை 2014 மற்றும் 2015-இல் ஏற்பட்ட எல்-நீனோ போன்று மோசமாக இல்லை,” என்று மலேசிய வானிலை ஆய்வு துறை இலாகாவின் தலைமை இயக்குநர் அலுய் பஹாரி கூறியதாக ஸ்தார் ஓன்லைன் செய்தி வெளியிட்டுள்ளது.

தென் மேற்கு பருவ காற்று மே 17 தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். அலுய் மேலும் கூறுகையில் மிக அதிகமான வெப்ப அடைவுநிலை இந்த காலகட்டத்தில் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

panas

 

 

 

 

 

Kepulan asap dari pembakaran hutan untuk membuka lahan perkebunan di dataran tinggi Nisam Antara, Aceh Utara, Aeh, Minggu (30/7). Badan Meteorologi, Klimatologi, dan Geofisika (BMKG) Aceh menyebutkan 49 titik panas terpantau oleh satelit berada di delapan wilayah di Aceh sehingga menyebabkan bencana kabut asap hampir merambah 23 kabupaten/kota di Aceh. ANTARA FOTO/Rahmad/foc/17.

 

 

 

 

 

புதிய வரைபடத்தில் தென் சுமத்திராவில் காடுகள் எரிந்து கொண்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதே போன்று மேற்கு கலிமந்தான், சபா மற்றும் சரவாக் போன்ற பகுதிகளில் சிவப்பு நிறமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவப்பு நிறம், அதிக அளவில் வெப்பம் உள்ளதாகவும் புல்வெளி மற்றும் சிறிய காடுகள் எரியக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் ஆகஸ்ட் மாதத்தில் பெய்யும் மழை காடுகள் எரியக்கூடிய சூழ்நிலையை பலவீனப்படுத்தும் என்று அலுய் கூறினார்.

”  சூழ்நிலை அவ்வளவு பயப்படும் அளவிற்கு இல்லை, ஆனாலும் அமலாக்க பிரிவினர் திறந்த வெளி எரிக்கும் நடவடிக்கைகளை தடுக்க வேண்டும்,” என்று அலுய் கூறினார்.

 

SUMBER: MSTAR ONLINE
=EZY=


Pengarang :