NATIONALRENCANA PILIHAN

அஸ்மின், மாட் சாபு மற்றும் ஸூராய்டா நியமனங்கள் பாக்காத்தானின் திட்டங்களை வலுப்படுத்தும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 11:

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் உச்ச மன்றம் நேற்று மூன்று தலைவர்களை முக்கிய பொறுப்புகளுக்கு நியமனம் செய்தது கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

நியமனங்களை அறிவித்த பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் ஆலோசகர் துன் மகாதீர் முகமட், அந்த கூட்டணியின் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியை தேர்தல் இயக்குனராக நியமிக்கப்பட்டது அரசியல் வியூகமாக தெரிகிறது. டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தேர்தல் குழுவின் தலைவராக செயல்படுவார்களா என்று தமது அறிக்கையில் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் துணைத் தலைவர் மாட் சாபு தொடர்பு குழு தலைவராகவும், அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர், ஸூராய்டா கமாரூடின் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் மகளிர் தலைவியாக நியமனம் செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

14-வது பொதுத் தேர்தலையொட்டி, நாட்டை 22 வருடங்கள் ஆண்ட அனுபவம் கொண்ட துன் மகாதீர் முகமட் நேற்று நடந்த பாக்காத்தான் உச்ச மன்ற கூட்டத்திற்கு பிறகு வெளியிட்ட அறிக்கையின் வாயிலாக அம்னோ தேசிய முன்னணியை வீழ்த்த சிறந்த ஒரு வியூகத்தை வகுத்துக் கொண்டு வருகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

*தமிழாக்கம் கு.குணசேகரன்


Pengarang :