SELANGOR

இசிஆர்எல் அதிக செலவாகும், சிலாங்கூர் பரிவுமிக்க திட்டங்களை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் கொடுக்கும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 19:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் இதுவரை கோம்பாக் இருந்து போர்ட் கிள்ளான் செல்லும் கிழக்குக்கரை இலகு இரயில் திட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். இந்த திட்டம் மிக அதிகமாக செலவிடப் படுகிறது என்ற காரணத்தினால் இன்னும் பரிசீலனையிலே இருக்கிறது. இசிஆர்எல் திட்டத்தின் மொத்த செலவீனம் கிட்டத்தட்ட ரிம 55 பில்லியன் ஆகும், இது மக்களை பெரிதும் பாதிக்கிறது என்று விவரித்தார்.

”   கருவூலத்தின் தலைமைச் செயலாளர், டான்ஸ்ரீ டாக்டர் முகமட் ஹிர்வான் ஸ்ரீகார் அப்துல்லா என்னை சந்தித்து போர்ட் கிள்ளானுக்கு செல்லும் இலகு இரயில் திட்டத்திற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனாலும், சிலாங்கூர் இன்னும் அனுமதி வழங்கவில்லை. திட்டம் மிகவும் அதிகமான செலவில் கட்டப்படுவதால் ஆழ்ந்த யோசனை மற்றும் ஆய்விற்கு பிறகு முடிவு தெரிவிக்கப்படும்,” என்று தெரிவித்தார்.

Azmin Kongres

 

 

 

 

 

மேற்கண்ட செய்தியை நேற்று இரவு மிட்லண்ஸ் பல்நோக்கு மண்டபத்தில் நடந்த சிலாங்கூர் சமுதாய செயல்பாடுகள் திட்டம் மற்றும் சிலாங்கூர் தொண்டுழியர்கள் இரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

சிலாங்கூர் மாநில அரசாங்கம் முன்னேற்றம் மற்றும் மேம்பாடுகள் மக்களுக்கு உறுதியாக பயனை தரும் என்று கருதவில்லை என்று அஸ்மின் அலி கூறினார். சிலாங்கூர் மக்களை சுமைப்படுத்தாமல் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத தரமான மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்று உறுதி அளித்தார்.

 

ECRL

 

 

 

 

 

 

 

 

கிழக்குக்கரை இலகு இரயில் திட்டத்தின் 600.3 கிலோமீட்டர் தூரத்திற்கான முதல் கட்ட பணிகள் அண்மையில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. சிலாங்கூர், பகாங், திரேங்கானு மற்றும் கிளந்தான் ஆகிய மாவட்டங்களில் வழியே இத்திட்டம் மேற்கொள்ளப்படும்.

#கேஜிஎஸ்


Pengarang :