ANTARABANGSASUKANKINI

கொடி அச்சிடப்பட்டதை பெரிதுபடுத்த வேண்டாம் என்றார் ஜோக்கோவி

ஜாகர்த்தா, ஆகஸ்ட் 20:

இந்தோனேசியா அதிபர் ஜோக்கோ விடோடோ, சீ விளையாட்டு போட்டி 2017- க்கான நினைவு மலரில் தலைக்கீழாக அச்சிடப்பட்ட தன் நாட்டின் கொடி விசயத்தை எல்லா தரப்பினரும் பெரிதுபடுத்த வேண்டாம் என்று இன்று கேட்டுக் கொண்டார்.

இந்தோனேசியா குடியரசின் அதிபர் வெளியிட்ட அறிக்கையை ஒட்டுமொத்த எல்லா தகவல் ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது என்றாலும் தனது நாட்டு மக்களை அமைதி காக்கும் படி கேட்டுக் கொண்டதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

”  இதைப் ஊதி பெரிதாக்க விரும்பவில்லை. மலேசியா ஆட்சியாளர்களிடம் இருந்து அதிகாரப்பூர்வ மன்னிப்புக்கு காத்துக் கொண்டிருக்கிறோம்,” என்று ஜோக்கோவி எனப்படும் இந்தோனேசியா அதிபர் தெரிவித்தார்.

2017-இன் சீ விளையாட்டு போட்டியின் ஏற்பாட்டு குழுவினர் இன்று இந்தோனேசியா நாட்டு மக்களிடம் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு கொண்டது.

ஏற்பாட்டு குழுவினரின் தகவலின் படி, மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் இந்தோனேசியா நாட்டின் சக அமைச்சர் இமாம் நாராவியை நேரிடையாக சந்தித்து மன்னிப்பு கோரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்: பெர்னாமா

#கேஜிஎஸ்


Pengarang :